• March
    30
    Monday

Main Area

Main



உறுதியளித்ததை விட 16 மடங்கு அதிக முதலீடு! - எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

வெளிநாட்டு சுற்றப் பயணத்தில் அளித்த உறுதி மொழியைக் காட்டிலும் 16 மடங்கு அதிகமாக சோஹோ நிறுவனம் தமிழகத்தில் முதலீடு செய்துள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி சில மாதங்களுக்கு முன்பு வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் படி மூன்று நிறுவனங்களின் செயல்பாடு தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

eps


அப்போது பேசிய அவர், "தொழிற்சாலைகளின் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே முதலிடத்தில் தமிழ்நாடு உள்ளது. நாட்டின் இரண்டாவது பெரிய பொருளாதார மண்டலமாகத் தமிழ்நாடு விளங்குகிறது. கடந்தாண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் மூன்று லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.அவற்றில் 53 திட்டங்கள் தங்களது செயல்பாட்டைத் தொடங்கியுள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த 'சோஹோ ஹெல்த்' நிறுவனம் உறுதியளித்த முதலீட்டை விட 16 மடங்கு அதிகமாக முதலீடு செய்துள்ளது. இது, தமிழ்நாட்டின் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. தமிழ்நாட்டில் அந்நிய முதலீட்டாளர்கள் தொழில் தொடங்க ஏராளமான தொழில் நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன" என்றார்.

2018 TopTamilNews. All rights reserved.