darbar
  • January
    23
    Thursday

Main Area

Main



நிரம்பியது 120 அடி மேட்டூர் அணை ! 12 மாவட்டங்களுக்கு அலர்ட் !

மேட்டூர் அணை
மேட்டூர் அணை

மேட்டூர் அணையில் நீர் நிரம்பியதை அடுத்து 12 மாவட்டத்தில் காவிரி கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தொடர் கனமழை பெய்து வருகிறது. மேலும் தமிழகத்திலும் கனமழை பெய்து வருவதால் தருமபுரி மாவட்டம்

mettur dam

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது. இதையடுத்து கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீர் ஒகேனக்கல் வழியே மேட்டூருக்கு 25.000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணை நிரம்பிவிட்டதால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

mettur dam

இதையடுத்து, காவிரி ஆறு செல்லும் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்த்துள்ளது பொதுப்பணித்துறை. மேலும் தாழ்வான இடங்களில் வசிப்பவர்கள் வெளியேறவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து 12 மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கடிதம் அனுப்பி உள்ளது பொதுப்பணித்துறை.

2018 TopTamilNews. All rights reserved.