திமுக வேட்பாளர்கள் பெயரில் சுயேச்சைகள்… உதயசூரியன் போலவே இருக்கும் சின்னங்கள் – பாஜகவின் உள்ளடி வேலையா?

திமுக வேட்பாளர்கள் பெயரில் சுயேச்சைகள்… உதயசூரியன் போலவே இருக்கும் சின்னங்கள் – பாஜகவின் உள்ளடி வேலையா?

தமிழக தேர்தல் களம் உச்சக்கட்டத்தை நெருங்கிவிட்டது. கிட்டத்தட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வார காலமே இருக்கிறது. அரசியல் கட்சிகள் சூறாவளி பிரச்சாரம் செய்துவருகின்றன. முன்னதாக தேர்தல் அறிவிப்பு வெளியிட்டபோதே தேர்தல் ஆணையத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் முன்வைத்தனர். குறிப்பாக ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தி, மே 2ஆம் தேதி தான் வாக்குகள் எண்ணப்படும் என்பது பலத்த சந்தேகத்தை எழுப்பியது.

திமுக வேட்பாளர்கள் பெயரில் சுயேச்சைகள்… உதயசூரியன் போலவே இருக்கும் சின்னங்கள் – பாஜகவின் உள்ளடி வேலையா?

ஒரு மாத காலத்திற்கு எதற்குத் தள்ளிப்போட வேண்டும், அந்த இடைப்பட்ட காலத்தில் வாக்குகள் பதிவான இயந்திரங்கள் எப்படி பாதுக்காக்கப்படும் என பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டும் பொதுநல வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. அதேபோல ஏப்ரல் 6ஆம் தேதி பாஜக கட்சி தொடங்கப்பட்ட நாள். அந்த நாளில் ஏன் தேர்தல் வைக்க வேண்டும். இதெல்லாம் திட்டமிடப்பட்டதோ என்ற ஐயமும் மக்கள் மத்தியில் எழுந்தது. அப்போதே மத்திய பாஜக அரசுக்கு தேர்தல் ஆணையம் துணை போவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

திமுக வேட்பாளர்கள் பெயரில் சுயேச்சைகள்… உதயசூரியன் போலவே இருக்கும் சின்னங்கள் – பாஜகவின் உள்ளடி வேலையா?

இப்போது புது சர்ச்சை எழுந்திருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணி ஆட்சியமைக்கக் கூடாது என்பதில் பாஜக தெளிவாக இருக்கிறது. அதனால் எந்த மூலைகளிலெல்லாம் கார்னர் செய்ய முடியுமோ அங்கெல்லாம் செய்கிறது. சமீபத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐடி ரெய்டுகள் கூட பாஜகவின் கைங்கர்யம் தான் என வைகோ உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர் குற்றஞ்சாட்டினர். தற்போது திமுக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் சுயேச்சைகள், உதயசூரியனை சின்னத்தைப் போலவே இருக்கும் வேறொரு சின்னமும் அந்த சுயேச்சைகளுக்கு வழங்கப்பட்டிருப்பது தான் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

திமுக வேட்பாளர்கள் பெயரில் சுயேச்சைகள்… உதயசூரியன் போலவே இருக்கும் சின்னங்கள் – பாஜகவின் உள்ளடி வேலையா?

பாஜகா தலைவர் எல்.முருகன் போட்டியிடும் தொகுதியான தாராபுரத்தில் திமுக சார்பில் கயல்விழி போட்டியிடுகிறார். இதே பெயரில் இரண்டு கயல்விழிகள் போட்டியிட்டாலும் அவர்களில் ஒருவருக்கு உதயசூரியன் சின்னத்தைப் போல ஒரு பேனாவைச் சுற்றி கற்றைகள் பொறிக்கப்பட்டுள்ளன. இது தான் சாதாரணமானது தான் என்று நினைத்தால் நெய்வேலியிலும் அதே முறையே கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

திமுக வேட்பாளர்கள் பெயரில் சுயேச்சைகள்… உதயசூரியன் போலவே இருக்கும் சின்னங்கள் – பாஜகவின் உள்ளடி வேலையா?

திமுக சார்பில் சபா ராஜேந்திரன் போட்டியிட, அவரை எதிர்த்து பாமகவின் ஜெகன் நிற்கிறார். விஷயம் அதுவல்ல. ராஜேந்திரன் பெயரில் ஒரு சுயேச்சை களமிறக்கப்பட்டு, அவருக்கும் அதே சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் படிப்பறிவில்லாத வாக்காளர்களுக்குக் குழப்பம் ஏற்படுத்தலாம் என்று திட்டம் தீட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது. திமுக ஜெயிக்கக் கூடாது என்பதற்காகத் தான் மத்திய பாஜக அரசு, அரசாரங்கம் சாரா தனி அமைப்பு என்று சொல்லப்படும் தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் செயல்படுத்துவதாக திமுகவினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.