ஷாக் கொடுத்த கோலி… சீட்டுக்கட்டாய் சரிந்த மிடில் ஆர்டர் – இக்கட்டான நிலையில் இந்தியா!

 

ஷாக் கொடுத்த கோலி… சீட்டுக்கட்டாய் சரிந்த மிடில் ஆர்டர் – இக்கட்டான நிலையில் இந்தியா!

கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாள் மழை குறுக்கிட்டது. இதனால் முதல் நாள் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. மழை விடாமல் பெய்து கொண்டிருந்ததால் அன்றைய நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. ஆனால் நேற்று மழை ஓய்ந்துவிட்டதால் போட்டி நடத்தப்பட்டது. மழை பெய்திருப்பதால் ஃபிட்ச்சின் தன்மை மாறியிருக்கும். ஆகவே இந்தியாவில் ஒரு ஸ்பின்னரை உட்கார வைத்து அதற்குப் பதிலாக வேகப்பந்துவீச்சாளரை எடுத்துச் செல்ல வேண்டும் என முன்னாள் ஜாம்பாவான்கள் கூறினர்.

ஷாக் கொடுத்த கோலி… சீட்டுக்கட்டாய் சரிந்த மிடில் ஆர்டர் – இக்கட்டான நிலையில் இந்தியா!

ஆனால் அதையெல்லாம் இந்திய அணி கண்டுகொள்ளவே இல்லை. ஏற்கெனவே அறிவித்த அணியுடனே களத்திற்கு வந்தது. நியூஸிலாந்து தரப்பில் டிரெண்ட் போல்ட், ஜெமிசன், டிம் சவுத்தி, நீல் வாக்னர் என நான்கு புயல்களை உள்ளே இழுத்து வந்தார் வில்லியம்சன். முன்னாள் வீரர்கள் சொன்னது போலவே ஃபிட்ச் வேகப்பந்துவீச்சுக்கே சாதகமாக இருந்தது. பேட்ஸ்மேன்கள் எவ்வளவு தான் பந்தைப் பார்த்து ஆடினாலும் வேகப்பந்துவீச்சாளர்கள் அவர்களைத் தோற்கடித்தனர் என்றே சொல்ல வேண்டும். நேற்றைய நாள் ஆட்டத்தில் ரோஹித் சர்மா, கில், புஜாரா ஆகிய மூவருமே சொற்ப ரன்களிலேயே அவுட்டாகி வெளியாகினர்.

Image

மூன்றாம் நாளான இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆட்டம் துவங்கும் என கூறப்பட்டது. ஆனால் ஈரப்பதம் குறையாத காரணத்தால் ஆட்டம் 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது. அதனால் இன்றைய நாள் ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 11 மணி வரை நடைபெறும் என பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது. இன்று ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கேப்டன் கோலி அவுட்டாகி பெவிலியன் திரும்பி ஏமாற்றமளித்தார்.

Image

அவர் போன வேகத்திலேயே நம்பிக்கை நட்சத்திரம் பண்ட் 4 ரன்களில் அவுட்டானார். ஓரளவு தாக்கு பிடித்த ரஹானே அரைசதம் அடிக்காமலேயே 49 ரன்களில் நடையைக் கட்டினார். தற்போது ஆல்ரவுண்டர்களான அஸ்வினும் ஜடேஜாவும் ஆடி வருகின்றனர். ஆறு விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்திருக்கிறது. நியூஸிலாந்து தரப்பில் ஜெமிசன் 3 விக்கெட்டுகளையும் வாக்னர் 2 விக்கெட்டுகளையும் போல்ட் 1 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.