சிங்கிளாக தவித்த பண்ட்… அக்சரால் வந்த வினை- இங்கி. தலையில் பேரிடி!

 

சிங்கிளாக தவித்த பண்ட்… அக்சரால் வந்த வினை- இங்கி. தலையில் பேரிடி!

முதல் டெஸ்ட் தோல்விக்குப் பழிதீர்க்கும் இரண்டாவது டெஸ்டில் அதிரிபுதிரியாகக் களமிறங்கிய இந்திய அணி. கடைசியாக ஒரு வழியாக கேப்டன் கோலி டாஸ் ஜெயித்துவிட்டார். பேட்டிங்கும் எடுத்துவிட்டார். ஆஸ்திரேலியா தொடர், இந்தியாவில் முதல் டெஸ்ட் என தொடர்ந்து மோசமான ஆட்டத்தால் விமர்சிக்கப்பட்ட ரோஹித் சர்மா நேற்று கதக்களி ஆடிவிட்டார் என்று சொல்ல வேண்டும். டெஸ்ட் போட்டியா டி20 போட்டியா என்று தெரியாத வண்ணம் அடி வெளுத்துவிட்டார். இங்கிலாந்து பவுலர்கள் நடுங்கிவிட்டார்கள் என்றே கூற வேண்டும்.

சிங்கிளாக தவித்த பண்ட்… அக்சரால் வந்த வினை- இங்கி. தலையில் பேரிடி!

எப்போதும் 100 அடித்த பிறகு பொளந்துகட்டுவது அவரது பாணி. ஆனால் நேற்று அதற்கு மாறாக 100 அடித்த பின் சைலண்ட் மோடுக்கு போய்விட்டார். அவருக்கு ரஹானே நல்ல கம்பேனி கொடுத்தார். 86-3 என்ற நிலையிலிருந்த இந்தியாவை இந்த இணை 248 ரன்கள் வரை எடுத்துச் சென்றது. ஆனால், அடுத்தடுத்த ரன்களில் இந்த இணை விரைவிலேயே பெவிலியன் திரும்பியது. ரோஹித் (161), ரஹானே (67) அப்போதே ஆட்டம் இந்தியாவின் கைநழுவி போய்விட்டது என்றே சொல்ல வேண்டும்.

Image

பண்ட் மட்டுமே ஒற்றை நம்பிக்கையாக இருந்தார். அவர் வழக்கம் போல தனது ஆட்டத்தை வெளிப்படுத்தியும் அடுத்த வந்த அஸ்வின் உள்ளிட்ட டெய்லெண்டர்கள் அவருக்கு ஒத்துழைக்கவில்லை. அவரை விடுத்து அனைவரின் விக்கெட்டையும் எளிதாகக் கைப்பற்றி 329 ரன்களுடன் இன்னிங்ஸை முடித்துவைத்தனர்.

Image

முதல் போட்டி அளித்த வெற்றிக்களிப்பில் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு அடுத்தடுத்து இடி விழுந்து கடைசியாகப் பேரிடியே விழுந்துவிட்டது. தொடக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸ் டக் அவுட்டாக, சிப்லேவை 16 ரன்களில் வெளியேற்றினார் அஸ்வின். கடந்த போட்டியில் இரட்டைச் சதமடித்த கேப்டன் ரூட் 6 ரன்களுடன் அக்சர் படேல் பெவியலனுக்கு சிறப்பாக அனுப்பிவைத்தார். டெஸ்டில் அறிமுகமான முதல் போட்டியிலேயே தலைசிறந்த வீரரின் விக்கெட்டை எடுத்து அதகளப்படுத்தியுள்ளார்.

இதனால் இங்கிலாந்து அணியின் புதிய மீட்பர் யார் என்ற கேள்வியெழுந்துள்ளது. தற்போது 38-3 என்ற நிலையில் இங்கிலாந்து இருக்கிறது. ஸ்டோக்ஸும் லாரன்ஸும் களத்தில் இருக்கிறார்கள்.