இந்திய அணிக்கு வாழ்வா, சாவா ஆட்டம்… ‘சிட்னி நாயகன்’ நடராஜனை அழைத்த கோலி!

இந்திய அணிக்கு வாழ்வா, சாவா ஆட்டம்… ‘சிட்னி நாயகன்’ நடராஜனை அழைத்த கோலி!

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான டி20 தொடர் அகமதாபாத்தில் நடைபெற்றுவருகிறது. நான்கு போட்டிகள் நடந்துமுடிந்த நிலையில் இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமமாக இருக்கின்றன. இந்நிலையில் இன்று வெற்றி கோப்பை யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் கடைசி போட்டி இன்று நடைபெறவுள்ளது. மிக முக்கியமான ஆட்டம் என்பதால் கடந்த நான்கு முறையும் அணியில் சரியாக ஆடாத கேஎல் ராகுல் இன்று ஓரங்கட்டப்பட்டுள்ளார்.

இந்திய அணிக்கு வாழ்வா, சாவா ஆட்டம்… ‘சிட்னி நாயகன்’ நடராஜனை அழைத்த கோலி!

அவருக்குப் பதிலாக தொடக்கவீரராக கேப்டன் கோலியே களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல அவரது இடத்தில் சூர்யகுமார் யாதவ் மூன்றாம் இடத்தில் இறங்குவார். அவருக்குப் பிடித்த இடத்தில் ஆட வைப்பது அணிக்கு கூடுதல் பலத்தைக் கொடுக்கும் என்பதால் இந்த முடிவை கோலி எடுத்திருக்கிறார். அதேபோல ஆஸ்திரேலியாவில் டி20 தொடரை வெல்ல காரணமாக இருந்த நடராஜன் அணிக்குள் திரும்பியிருக்கிறார்.

இந்திய அணிக்கு வாழ்வா, சாவா ஆட்டம்… ‘சிட்னி நாயகன்’ நடராஜனை அழைத்த கோலி!

பிளேயிங் 11 வீரர்கள் விவரம்:

இந்தியா: ரோஹித் சர்மா, கோலி, பண்ட், ஸ்ரேயாஷ் ஐயர், பாண்டியா, ஷர்துல் தாக்கூர், சுந்தர், புவனேஸ்வர் குமார், ராகுல் சஹர்

இங்கிலாந்து: ஜெசன் ராய், ஜோஸ் பட்லர், மாலன், பெயர்ஸ்டோ, மோர்கன், ஸ்டோக்ஸ், சாம் கரண், ஜோர்டான், ஆர்ச்சர், அதில் ரஷீத், மார்க் வுட்