சூடான சுந்தர்… சுலுக்கெடுத்த அக்சர் – இன்னிங்ஸ் வெற்றி கண்ட ‘கிங்’ கோலியின் போர்ப்படை!

 

சூடான சுந்தர்… சுலுக்கெடுத்த அக்சர் – இன்னிங்ஸ் வெற்றி கண்ட ‘கிங்’ கோலியின் போர்ப்படை!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்துடன் யார் மோதப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புடன் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 4ஆவது டெஸ்ட் அகமதாபாத்தில் தொடங்கியது. முந்தைய போட்டியில் ஆடுகளத்தின் தன்மை குறித்த சர்ச்சையடுத்து மாற்றியமைக்கப்பட்டது. அதன் விளைவுகள் நன்றாகவே தெரிந்தது. சென்ற போட்டிகளில் ஃபிட்சை குறை சொல்லியவர்கள் இந்தத் தோல்விக்குப் பின் என்ன சொல்லப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

Image

அந்தளவிற்கு மிகச் சிறப்பான ஆட்டத்தை இந்தியாவின் இளம் வீரர்கள் ஆடிக் காண்பித்திருக்கிறார்கள். அக்சரின் சுழலில் 205 ரன்களில் இங்கிலாந்து அணி சுருண்டது. இதனையடுத்து இங்கிலாந்து சுழல் படையில் சிக்கி இந்தியா வீழ்ந்துவிடும் என்ற நினைப்பில் பண்டும் சுந்தரும் மண்ணள்ளி போட்டார்கள். டாப் ஆர்டரும் மிடில் ஆர்டரும் குலைந்து போனாலும் பண்ட்-சுந்தர்-அக்சர் என மூவரும் தூக்கி நிறுத்தி இன்னிங்ஸ் வெற்றியடையவும் வைத்துவிட்டார்கள். பண்ட் சதமடித்து அசத்த, கிட்டத்தட்ட சதத்தை நெருங்கிய சுந்தர் கடைசி வரை வீழாமல் இங்கிலாந்துக்குச் சிம்மசொப்பனமாக இருந்தார்.

Image

இறுதியில் இந்தியா 365 ரன்கள் சேர்த்து இங்கிலாந்தை விட 160 ரன்கள் முன்னிலை பெற்றது. அப்போதே இங்கிலாந்தின் தோல்வி உறுதியானது. ஃபிட்ச் பேட்டிங்குக்கு ஒத்துழைக்கிறது மோசமான தோல்வியைத் தவிர்க்க இங்கிலாந்து போராடும் என்று நினைத்திருந்த நிலையில், வழக்கம் போல சீட்டுக்கட்டாய் சரிந்துவிழுந்தார்கள். இதனால் இன்னிங்ஸ் தோல்வி என்ற மோசமான தோல்வியையும் பெற்றுவிட்டார்கள். லாரன்ஸ் மட்டும் அரைசதம் அடிக்க மற்ற யாவரும் சோபிக்கவில்லை. அக்சர் இந்தப் போட்டியிலும் ஒரு பைபர் எடுத்து அசத்தியிருக்கிறார். அஸ்வின் நான்கு விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறியது.