எங்க அமிதாப் மாமாவுக்கு கோவம் வந்திருச்சி… போட்டு பொளக்கும் ரோஹித் சர்மா!

 

எங்க அமிதாப் மாமாவுக்கு கோவம் வந்திருச்சி… போட்டு பொளக்கும் ரோஹித் சர்மா!

ஆஸ்திரேலியாவைச் சொந்த மண்ணில் வீழ்த்தி உற்சாகமாகச் சென்னை வந்த இந்திய அணிக்கு இங்கிலாந்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. நம்முடைய ஃபிட்ச் தானே அவர்களை வீழ்த்தி விடலாம் என்று தப்புக்கணக்கு போட்ட கோலி&கோ தலையில் ரூட் கொட்டுவைத்தார். இதனால் டெஸ்ட் புள்ளி பட்டியலில் சொய்ங் என்று முதலிடத்திலிருந்து இந்தியா 4ஆவது இடத்துக்கு இறங்கியது. இச்சூழலில் பரபரப்பான இரண்டாம் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கியது.

எங்க அமிதாப் மாமாவுக்கு கோவம் வந்திருச்சி… போட்டு பொளக்கும் ரோஹித் சர்மா!

முதல் ஆட்டத்தில் கண்ட படிப்பினையால் அணியில் சில மாற்றங்களைச் செய்திருந்தார் கோலி. பும்ரா, சுந்தர், நதீம் ஆகியோரை பெஞ்சில் உட்கார வைத்து சிராஜ், அக்‌ஷர் படேல், குல்தீப்பை அணிக்குள் இழுத்திருந்தார். கடந்த முறை விட்ட டாஸை இந்த முறை கோலி வென்றுவிட்டார். வென்ற மாத்திரத்தில் பேட்டிங்கைத் தேர்வுசெய்தார். வழக்கம்போல ரோஹித்தும் கில்லும் ஓபனிங் இறங்கினர். வந்த வேகத்திலேயே வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார் கில். ஆஸ்திரேலியாவில் நம்பிக்கை கொடுத்த கில் இங்கு வந்து கெடுத்துக்கொண்டிருக்கிறார்.

Image

மறுபுறம் ரோஹித் அவரும் விரைவில் அவுட்டாகி விடுவார் என சமூக வலைதளத்தில் வழக்கம்போல ரசிகர்கள் வசைபாட பேட்டால் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார். ஃபீஸ்ட் மோடில் இறங்கி பேட்டை சுழற்றிக்கொண்டிருக்கிறார் என்பதே ஹைலைட். 24 ஓவரின் இந்தியா அடித்த ரன் 100. அதில் ரோஹித் மட்டும் 75 ரன்கள் எடுத்திருக்கிறார். அதுவும் 75 பந்துகளில். ரசிகர்கள் எங்க அமிதாப் மாமாவுக்கு கோவம் வந்திருச்சி என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Image

அடுத்ததாக இறங்கிய புஜாரா 21 ரன்களில் வெளியேறி ஏமாற்றிவிட்டார். கோலி ரோஹித்துக்கு கம்பேனி கொடுப்பார் என்று நினைத்தால் புஜாராவுக்கு கம்பேனி கொடுத்து பெவிலியன் திரும்பிவிட்டார். யார் போனா எனக்கென்ன என்பது போல் இங்கிலாந்து பந்துவீச்சை நொறுக்கிக்கொண்டிருக்கிறார் அமிதாப் மாமா… சாரி ரோஹித் சர்மா. கம்பேனிக்கு துணை கேப்டன் ரஹானே இருக்கிறார் பார்ப்போம்… இதனை எழுதி முடிப்பதற்குள் ரோஹித் அடித்த பவுண்டரிகளின் எண்ணிக்கை நான்கு!