சேப்பாக்க ‘கில்லி’ அஸ்வின்… நேத்து பவுலிங்; இன்னைக்கு பேட்டிங் – இங்கிலாந்தின் சோழி முடிஞ்சது!

 

சேப்பாக்க ‘கில்லி’ அஸ்வின்… நேத்து பவுலிங்; இன்னைக்கு பேட்டிங் – இங்கிலாந்தின் சோழி முடிஞ்சது!

முதல் போட்டியில் பெற்ற தோல்வியையடுத்து இரண்டாவது போட்டியை ஜெயித்தாக வேண்டும் என்ற முனைப்பில் இந்தியா களமிறங்கியது. முதல் வெற்றி கொடுத்த பூஸ்டில் இங்கிலாந்து இறங்கியது. சென்னை மைதானத்தைப் பொறுத்தவரையில் டாஸ் வின் செய்தால் மேட்ச் வின். ஏனென்றால், முதல் நாளில் ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகாமாகச் செயல்படும். அடுத்தடுத்த நாட்களில் ஸ்பின் பவுலிங்குக்கு அது பாஸாகி விடும். இதனால் டாஸ் வின் செய்து பேட்டிங் ஆடினால் வெற்றி 90% உறுதி.

சேப்பாக்க ‘கில்லி’ அஸ்வின்… நேத்து பவுலிங்; இன்னைக்கு பேட்டிங் – இங்கிலாந்தின் சோழி முடிஞ்சது!
சேப்பாக்க ‘கில்லி’ அஸ்வின்… நேத்து பவுலிங்; இன்னைக்கு பேட்டிங் – இங்கிலாந்தின் சோழி முடிஞ்சது!

முதல் நாளில் 6 விக்கெட்டுக்கு 300 ரன்கள் எடுத்த இந்தியா, அடுத்த நாளில் 29 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் இழந்ததை நாம் கண்கூடாகப் பார்த்தோம். இங்கிலாந்து எப்படி 134 ரன்களுக்குச் சுருண்டு தோல்வியின் பிடியில் சிக்குண்டது என்பதையும் பார்த்தோம். முதல் போட்டியில் இங்கிலாந்து டாஸ் வின் செய்ததால் அந்த அணி வெற்றிபெற்றது. தற்போது இந்தியா வெற்றிபெறப் போகிறது. சென்னையில் டாஸ் என்பது முக்கியவத்துவம் வாய்ந்தது.

Image result for ashwin ind vs eng

195 ரன்கள் முன்னிலையோடு இந்தியா 2ஆவது இன்னிங்ஸில் களமிறங்கியது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் கேப்டன் கோலியைத் தவிர்த்து யாரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. முன்னிலை ரன்கள் இருந்ததால் அது பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. மிடில் ஆர்டரும் சோபிக்கவில்லை. நேற்று பவுலிங்கில் 5 விக்கெட்டுகள் சாய்த்த அஸ்வின் இன்று தனி ஆளாக நின்று சதமடித்து அசத்திவிட்டார். கோலி 62 ரன்களில் வீழ்ந்தார். முன்பே சொன்னது போல சேப்பாக்கம் ஆடுகளம் ஸ்பின்னுக்குச் சாதகமானது என்பதால் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து மொயின் அலி 8 விக்கெட்டுகளையும் ஜாக் லீச் 6 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளனர்.

இரண்டாவது இன்னிங்ஸில் அஸ்வின் நிச்சயமாக இவர்களை பீட் செய்வார். 286 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்டானதையடுத்து 482 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. மிகவும் கடினமான இலக்கு ஒருபுறம், ஆடுகளம் ஸ்பின்னுக்குச் சாதகமானது மறுபுறம் என நெருக்கடியான சூழலில் இங்கிலாந்து சிக்கித்தவித்துள்ளது. இன்னும் இரண்டு நாட்கள் ஆட்டம் எஞ்சியிருக்கும் நிலையில் இங்கிலாந்து எப்படி ஆடும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்…