48 பந்துகளில் 88 ரன்கள் திக் திக் பரபரப்பு நிமிடங்கள் – #IndVsAus

 

48 பந்துகளில் 88 ரன்கள் திக் திக் பரபரப்பு நிமிடங்கள் – #IndVsAus

ஆஸ்திரேலியா – இந்தியா இரு அணிகளுக்கு இடையில் இதுவரை நடந்துமுடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன.

105.4 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 338 ரன்கள் எடுத்தது. ஸ்டீவ் ஸ்மித் சதமடித்தார்.

48 பந்துகளில் 88 ரன்கள் திக் திக் பரபரப்பு நிமிடங்கள் – #IndVsAus

அடுத்து ஆடிய இந்திய அணியில் ஜடேஜா 28 ரன்களோடு ஆடிக்கொண்டிருந்தார். ஆனால், அவருக்கு இணையாக எதிர்முனையில் ஆட யாருமே இல்லாததால் இந்திய அணி 10 விக்கெட்டுகளை இழந்தி 244 ரன்களுக்குள் சுருண்டது. இதன்மூலம் ஆஸ்திரேலியாவை விட 94 ரன்கள் குறைவாகவே எடுத்திருக்கிறது.

ஆஸ்திரேலியா இரண்டாம் இன்னிங்க்ஸில் 312 ரன்கள் அடித்தது. எனவே இந்திய அணிக்கு வெற்றிப் பெற பெரும் சவாலானது. இந்தியாவின் இரண்டாம் இன்னிங்க்ஸில் ரோஹித் ஷர்மா 52, புஜாரா 77, ரிஷப் பண்ட் 97 என அடித்து விளையாடினார்கள்.

48 பந்துகளில் 88 ரன்கள் திக் திக் பரபரப்பு நிமிடங்கள் – #IndVsAus

ஆனாலும் வெற்றி இலக்கை தொட இன்னும் 51 பந்துகளி 88 ரன்கள் தேவை என்ற நிலை இருக்கிறது. 5 விக்கெட்டுகளை இழந்து விஹாரியும் அஸிவினும் விளையாடி வருகிறார்கள். டி20 போட்டி போல விளையாடினால் மட்டுமே வெல்ல முடியும் ஒவ்வொரு பந்தும் மிக முக்கியமானது. என்ன நடக்கப்போகிறதோ!

விஹாரி எந்தப் போட்டியொலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வில்லை. அதனால், இன்றைய போட்டியை வென்று கொடுத்தால் அவரின் ஆட்டம் பற்றி சிறப்பாகப் பேசப்படும். ஆனால், அவரும் அஸ்வினும் சேர்ந்து ஓவர்களை மெயிண்டன் ஓவராக்கி வருவதைப் பார்த்தால் போட்டியை டிராவாக்க விரும்பதுபோலவே தெரிகிறது.

60 பந்துகள் 88 ரன்கள் என்று இருந்ததை 43 பந்துகளில் 88 ரன்கள் என்று ஆக்கி விட்டார்கள். வெற்றிக்கு இவர்கள் முயலவே இல்லை என்பதையே இது காட்டுகிறது. அஸ்வினாவது பவுலர் விஹாரி பேட்ஸ்மேன் கேட்டகிரியில்தான் அணியில் இருக்கிறார். அவராவது வெற்றியை நோக்கி விளையாட முயன்றிருக்கலாம். அல்லது அஸ்வினை அடித்து ஆடச் சொல்லி இவர் நிதானமாக விக்கெட்டை தக்க வைத்துக்கொண்டிக்கலாம். வெற்றியை விரும்பி தவிர்ப்பதைப் போல இருக்கிறது,