Home உலகம் 3 நாடுகளில் மட்டும் 5 இலக்கத்தில் அதிகரிக்கும் புதிய நோயாளிகள் – உலகளவில் கொரோனா நிலவரம்

3 நாடுகளில் மட்டும் 5 இலக்கத்தில் அதிகரிக்கும் புதிய நோயாளிகள் – உலகளவில் கொரோனா நிலவரம்

கோவிட் -19 : உலகை அச்சுறுத்திக்கொண்டிக்கும் ஒரு சொல். ஒருநாளில் அதிகம் உச்சரிக்கப்படும் சொல்லாகவும் இதுதான் இருக்கிறது. அந்தளவுக்கு பெரும் தொல்லையை அளித்து வருவது கொரோனா வைரஸ் தாக்குதல்தான். சென்ற ஆண்டு சீனாவில் தொடங்கிய இந்தத் துயரம் இன்னும் முடிந்தபாடில்லை.

உலகம் முழுவதும் இதன் பாதிப்புகள் நிறைந்திருக்கின்றன. கடந்த 100 நாட்களாக புதிய கொரோனா நோயாளிகள் யாரும் இல்லை என நியூசிலாந்து நாடு அறிவிக்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது.

ஆனால், 102 நாள்கள் கழித்து மீண்டும் கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கிறது. இதனால், மீண்டும் அந்த நாட்டில் லாக்டெளன் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இன்றைய (ஆகஸ்ட் 12) காலை நிலவரப்படி, உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை, குணம் பெற்றவர்கள், மரணம் அடைந்தவர்கள், தற்போது சிகிச்சையில் இருப்போர்களின் விவரங்களைப் பார்ப்போம்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 5 லடத்து 22 ஆயிரத்து 191 பேர்.

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 1 கோடியே 34 லட்சத்து 41 ஆயிரத்து 913 நபர்கள்.

Volunteers of Social Democratic Party of India wearing a protective gear carry an abandoned body of a victim who died from the COVID-19 coronavirus, during a burial at a graveyard in Chennai on June 16, 2020. (Photo by Arun SANKAR / AFP)

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 7 லட்சத்து 45 ஆயிரத்து 927 பேர்.  இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள்.

தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 63 லட்சத்து 34 ஆயிரத்து 351 பேர். இவர்களில் 99 சதவிதத்தினர்  லேசான அறிகுறிகளோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் இருக்கு 1 சதவிகிதத்தினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் நிலை இருக்கிறது.

Concept to represent the 2020 virus threat Coronavirus, blood in a test tube.

நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது  அமெரிக்காவில் 53 லட்சத்து 05 ஆயிரத்து 957 பேரும், பிரேசில் நாட்டில் 31 லட்சத்து 12 ஆயிரத்து 393 பேரும் இந்தியாவில் 23 லட்சத்து 28 ஆயிரத்து 405 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்

இதில் அமெரிக்காவில் பார்த்தால் மொத்தப் பாதிப்பு 53,03,957 பேர். அவர்களில் குணம் அடைந்திருப்பவர்கள் 27,55,348 பேர். கிட்டத்தட்ட 50 சதவிகிதத்திற்கு சற்று அதிகமான விகிதமே குணம் அடைந்திருக்கிறார்கள்.

புதிய நோயாளிகளின் அதிப்பதில் இந்தியாவே முதல் இடத்தில் இருக்கிறது. நேற்றைய நிலவரத்தின் அப்டேட் படி, இந்தியாவில் 61,252 பேர் புதிய நோயாளிகள். இந்த எண்ணிக்கை அமெரிக்கா, பிரேசிலை விடவும் சுமார் 7,000 அதிகம்.

Most Popular

‘மொழி திணிப்பை ஏற்க முடியாது’ செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

அதிமுக செயற்குழு கூட்டத்தில் தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் தொடரும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது என்பது...

”தொற்று அதிகம் உள்ள பகுதியா” ? – கூகுள் மேப்ஸில் தெரிந்துகொள்ளலாம்!

கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை இனி கூகுள் மேப்ஸ் மூலமாகவே தெரிந்துகொள்ள முடியும். இத்தகைய வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டு உள்ளது.

“கண்டவனோட கட்டி புடிச்சுகிட்டு போறியா” -பைக்கில் போன பெண்ணுக்கு நேர்ந்த நிலை

தன்னுடைய காதலி வேறொரு வாலிபனோடு பைக்கில் உரசியபடி போவதை பார்த்து பொறாமைப்பட்டு,அவரின் ஒரு தலை காதலன் அந்த பெண்ணை கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

‘எஸ்.பி.பியின் சிகிச்சைக்கான கட்டணம் பற்றிய வதந்தி’ வீடியோ மூலம் முற்றுப்புள்ளி வைத்த சரண்!

மறைந்த பிரபல பாடகர் எஸ்.பிபியின் மருத்துவக் கட்டணம் விரைவில் வெளியாகும் என எஸ்.பி.பியின் மகன் சரண் தெரிவித்துள்ளார். 50 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...
Do NOT follow this link or you will be banned from the site!