இஸ்ரேலில் அதிகரிக்கும் புதிய நோயாளிகள் – தற்போதைய நிலவரம்

 

இஸ்ரேலில் அதிகரிக்கும் புதிய நோயாளிகள் – தற்போதைய நிலவரம்

இஸ்ரேல் நாட்டில் மீண்டும் லாக்டெளன் அறிவிக்கப்பட்டிருக்கிறது. காரணம், சமீப சில நாட்களாக அதிகரிக்கும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 6 லட்சத்து  97 ஆயிரத்து 734 பேர்.  கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 23 லட்சத்து 39 ஆயிரத்து 889 நபர்கள்.

இஸ்ரேலில் அதிகரிக்கும் புதிய நோயாளிகள் – தற்போதைய நிலவரம்

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 9 லட்சத்து 56 ஆயிரத்து 444 பேர்.   தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 74,01,399 பேர்.

கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது அமெரிக்காவில் 69,25,941 பேரும், இந்தியாவில் 53,08,014 பேரும், பிரேசில் நாட்டில்  44,97,434 பேரும் கொரோனவால்  பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இஸ்ரேலில் அதிகரிக்கும் புதிய நோயாளிகள் – தற்போதைய நிலவரம்

இஸ்ரேலைப் பொறுத்தவரை இன்றைய தேதி வரை கொரோனாவினால் அடைந்த மொத்த பாதிப்பு 1 லட்சத்து 79 ஆயிரத்து 71 பேர். இவர்களில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 24 பேர் குணமடைந்துவிட்டனர். 1,196 பேர் மரணம் அடைந்துள்ளனர். இறப்பு சதவிகிதம் 1. சிகிச்சையில் 47,851 பேர் இருக்கிறார்கள்.

இந்த ஆண்டு பிப்ரவரி 21 –ம் தேதிதான் இஸ்ரேலில் முதல் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டார். அடுத்த ஒரு மாதம் முடிவடையும்போது எண்ணிக்கை 1000 –யைக் கடந்தது. அதன்பின் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை வேகமெடுத்தது ஆயினும் கட்டுக்குள் நிலைமை கொண்டுவரப்பட்டது.

இஸ்ரேலில் அதிகரிக்கும் புதிய நோயாளிகள் – தற்போதைய நிலவரம்

மீண்டும் ஜுன் மாதம் இரண்டாம் வாரத்தில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. எண்ணிக்கை உயர்ந்தும் குறைந்தும் வந்த நிலையில் செப்டம்பர் மாதத்தில் இன்னும் வேகத்தில் எண்ணிக்கை உயர்ந்தது. செப்டம்பர் 16-ம் தேதி மட்டும் 6,063 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டது.

இறப்பைப் பொறுத்தவரை இஸ்ரேலின் முதல் கொரோனா மரணம் மார்ச் மாதம் 20-ம் தேதி நடந்தது. மெல்ல அதிகரித்தது, ஆயினும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதத்திலிலிருந்து இறப்பும் அதிகரித்து வருகிறது. ஆகஸ்ட்19-ம் தேதி மட்டும் 73 பேர் இறந்தனர். செப்டம்பர் 18-ம் தேதி 27 பேர் இறந்தனர்.

இஸ்ரேலில் அதிகரிக்கும் புதிய நோயாளிகள் – தற்போதைய நிலவரம்

நோய்த் தொற்று அதிகரிப்பால் இஸ்ரேலில்  2 வாரங்கள் லாக்டெளன் அறிவிக்கப்பட்டுள்ளது. 20 பேருக்கு மேல் கூடக்கூடாது என்றும் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.