ஆசை வார்த்தை காட்டி கோடிக்கணக்கில் அபேஸ் செய்யும் கும்பல்… ஆன்லைன் மேட்ரிமோனி அவலங்கள்

 

ஆசை வார்த்தை காட்டி கோடிக்கணக்கில் அபேஸ் செய்யும் கும்பல்… ஆன்லைன் மேட்ரிமோனி அவலங்கள்

ஆன்லைன் திருமண இணையதளம் மூலம் அறிமுகம் ஆகும் நபர்களை திருமணம் செய்து கொள்வதாக பழகி பலகோடி ரூபாயை ஒரு பெண் ஆட்டையை போட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஆன்லைன் திருமண இணையதளங்களில் தன்னை மருத்துவர் என்றும் அமெரிக்காவில் இருந்து வந்துள்ளதாகவும் அறிமுகம் செய்து கொண்ட 44 வயதான மாளவிகா என்பவர் ஆண்களிடம் பேசி பழகி பணம் பறித்து வந்துள்ளார். பல நாட்களுக்கு முன்னர் ஒரு வெளிநாடு வாழ் இந்தியரை ஏமாற்றி ரூ.65 லட்சம் மோசடி செய்ததற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதற்கிடையில் திருமணம் ஏற்பாடுகள் எனக்கூறி ஹைதராபாத்தைச் சேர்ந்த மற்றொரு தொழில்நுட்ப வல்லுநரை மோசடி செய்து ரூ .1 கோடி பறித்துள்ளார்.

ஆசை வார்த்தை காட்டி கோடிக்கணக்கில் அபேஸ் செய்யும் கும்பல்… ஆன்லைன் மேட்ரிமோனி அவலங்கள்

ஏமாற்றப்பட்டவர் 2018 ஆம் ஆண்டில் ஒரு திருமண தளத்தில் அந்தப் பெண்ணுடன் தொடர்பு கொண்டதாகக் கூறினார். மாளவிகா தன்னை அனு பல்லவி மாகந்தி, ஒரு மருத்துவர் மற்றும் ஜூபிலி ஹில்ஸில் குடியேறிய ஒரு அமெரிக்க குடிமகன் என்று அறிமுகப்படுத்தினார்.
அவர் தொடர்ந்து டெக்கியுடன் அரட்டை அடித்து, பாதிக்கப்பட்டவரிடமிருந்து தனது தொலைபேசி மற்றும் வங்கி கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதாகக் கூறி கடன் வாங்கினார். அவரை நம்பி, பாதிக்கப்பட்டவர் பல தவணைகளில் சுமார் 1 கோடி ரூபாய் தந்துள்ளார். இதேபோன்று அமெரிக்காவைச் சேர்ந்த என்.ஆர்.ஐ.யை ஏமாற்றியதற்காக மாலவிகா மற்றும் 22 வயது மகன் பிரணவ் ஆகியோரை மே 27 அன்று ஜூபிலி ஹில்ஸ் போலீசார் கைது செய்தனர்.