மே 25 அன்று 6,414 பேர்; ஜூன் 25 அன்று 18,185 பேர்- இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றல் வேகம் எடுக்கிறதா?

 

மே 25 அன்று 6,414 பேர்; ஜூன் 25 அன்று 18,185 பேர்- இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றல் வேகம் எடுக்கிறதா?

2019 ஆம் ஆண்டு டிசம்பரில் சீனாவில் தொடங்கிய கொரோனா நோய்த் தொற்றல் தற்போது உலகின் பெரும்பாலான நாடுகளில் கோர தாண்டவம் ஆடி வருகிறது. நாளுக்குள் நோய்ப் பரவும் வேகம் அதிகரித்து வருவது வேதனை அளிக்கக்கூடிய ஒன்றாகும்.

இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்று அதிகரிக்கும் சூழல் வந்தவுடன் மார்ச் 24-ம் தேதி லாக்டெளன் அறிவிக்கப்பட்டது. அது இந்நாள் வரை தொடர்கிறது. நோய்த் தொற்று அதிகம் பராவாது இடங்களில் சில விலக்குகள் அளிக்கப்பட்டன. நோய்த் தொற்று அதிகமான இடங்களான சிவப்பு பகுதிகளில் லாக்டெளன் கடுமையாக்கப்பட்டுள்ளது.

மே 25 அன்று 6,414 பேர்; ஜூன் 25 அன்று 18,185 பேர்- இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றல் வேகம் எடுக்கிறதா?

இந்த ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி இந்தியளவில் 3 பேர் மட்டுமே கொரொனா நோய்த் தொற்றலுக்கு உள்ளாகியிருந்தனர். ஏப்ரல் முதல் வாரம் வரை மெதுவாகவே நோயாளிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டிருந்தது. ஏப்ரல் 15-ம் தேதிக்குப் பிறகு வேகம் அதிகரிக்கத் தொடங்கியது. ஏப்ரல் 15-ம் தேதியன்று மொத்த எண்ணிக்கை 12,370 பேராக இருந்தது சரியாக ஒருமாதம் கழிந்த நிலையில் மே 15 -ம் 85,784 ஆக உயர்ந்தது. அதிலிருந்து ஒரு மாதம் கழித்து ஜூன் 15-ம் தேதி 3,73,026 என்று அசுர வேகம் எடுத்துள்ளது. ஜூன் 26 அன்று நிலவரப்படி நோய்த் தொற்றலின் மொத்த எண்ணிக்கை 5,09,446.

நோய்த் தொற்று, முதல் லடசத்திலிருந்து இரண்டு லட்சம் பேரை அடைய 16 நாள்களையும், மூன்று லட்சத்திலிருந்து நான்கு லட்சத்துக்கு 9 நாள்களையும், நான்கு லட்சத்திலிருந்து ஐந்து லட்சத்துக்கு 6 நாள்களை மட்டுமே கொரோனா எடுத்துக்கொண்டுள்ளது. இதன்மூலம் கொரோன நோய்த் தொற்று பரவல் வேகத்தை நாம் புரிந்துகொள்ளலாம்.

மே 25 அன்று 6,414 பேர்; ஜூன் 25 அன்று 18,185 பேர்- இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றல் வேகம் எடுக்கிறதா?

நாள்தோறும் அதிகரித்துவரும் கணக்கைப் பார்த்தால், மே 25 அன்று 6,414 பேராக இருந்தது, ஜூன் 25 அன்று 18185 பேராக அதிகரித்துள்ளது. அதாவது ஒரே மாதத்தில் நோய்த்தொற்றலின் வேகம் சுமார் மூன்று மடங்காகியுள்ளது.

இந்தியாவில் நோய்த் தொற்றல் அதிகரித்து வந்தாலும், நோயிலிருந்து நலம் பெற்றவர்களின் சதவிகிதமும் அதிகரித்தே உள்ளது. நேற்றைய நிலவரப்படி குணமாகுபவர்களின் சதவிகிதம் 58.24 ஆக உள்ளது நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது.

இவையெல்லாம் அச்சம் தருவதற்கான தகவல்கள் அல்ல. முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியதற்காகவே. நாமும் நம்மைச் சுற்றி உள்ளவர்களும் கவனத்துடன் இருப்போம்.