அதிகரிக்கும் கொரோனா: மீண்டும் அமலாகிறது இரவு நேர ஊரடங்கு!

 

அதிகரிக்கும் கொரோனா: மீண்டும் அமலாகிறது இரவு நேர ஊரடங்கு!

இந்தியாவில் நேற்றைய நிலவரப்படி தினசரி கொரோனா பாதிப்பு 45,083 ஆக பதிவாகியது. அத்துடன் இந்தியாவில் நேற்று ஒரேநாளில் கொரோனாவுக்கு 460 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 37 ஆயிரத்து 830 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3 லட்சத்து 68 ஆயிரத்து 552 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அதிகரிக்கும் கொரோனா: மீண்டும் அமலாகிறது இரவு நேர ஊரடங்கு!

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதனால் தொற்று பரவலை பொறுத்து கட்டுப்பாடுகளை விதித்து கொள்ளலாம் என்று மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் கேரளாவில் மட்டும் கொரோனா குறைந்த பாடில்லை. முதல் அலையை விட இரண்டாவது அலை கேரளாவில் தீவிரமாகி வரும் நிலையில் தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் கேரள அரசு திண்டாடி வருகிறது.

அதிகரிக்கும் கொரோனா: மீண்டும் அமலாகிறது இரவு நேர ஊரடங்கு!

இந்நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் கேரளாவில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் இரவு நேர ஊரடங்கும் அமலாகிறது. கேரள மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்து வரும் நிலையில் ஊரடங்கு அமலாகிறது. கொரோனா வார பாதிப்பு விகிதம் 7 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ள நிலையில் நேற்றைய முழு ஊரடங்கில் கேரள மாநிலம் முழுவதும் வெறிசோடி காணப்பட்டது.