அதிகரிக்கும் கொரோனா தொற்று… முழு ஊரடங்கை நோக்கி நகரும் பெங்களூரு! – எடியூரப்பா அவசர ஆலோசனை

 

அதிகரிக்கும் கொரோனா தொற்று… முழு ஊரடங்கை நோக்கி நகரும் பெங்களூரு! – எடியூரப்பா அவசர ஆலோசனை

பெங்களூருவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் முழு ஊரடங்கை கொண்டுவருவது பற்றி எடியூரப்பா இன்று முடிவெடுக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் பெருநகரங்களில் எல்லாம் கொரோனா வேகமாகப் பரவி வரும் நிலையில், பெங்களூருவில் கொரோனா பரவல் மிகக் குறைவாகவே உள்ளது. தற்போது அங்கும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. பெங்களூருவின் பல பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுக்க இதுவரை 10 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அதிகரிக்கும் கொரோனா தொற்று… முழு ஊரடங்கை நோக்கி நகரும் பெங்களூரு! – எடியூரப்பா அவசர ஆலோசனைஇதனால் பெங்களூருவில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக பேச்சு எழுந்தது. இது குறித்து அம்மாநில அமைச்சர் ஶ்ரீராமுலுவிடம் நிருபர்கள் கேட்டபோது, “பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் பெங்களூருவில் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருகிறது” என்றார். கர்நாடக எதிர்க்கட்சிகளும் ஊரடங்கை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

அதிகரிக்கும் கொரோனா தொற்று… முழு ஊரடங்கை நோக்கி நகரும் பெங்களூரு! – எடியூரப்பா அவசர ஆலோசனைஇந்த சூழ்நிலையில் கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் பெங்களூரு நகரம் முழுவதும் ஊரடங்கை அமல்படுத்துவதா, பாதிக்கப்பட்ட பகுதியில் மட்டும் முழு ஊரடங்கை அமல்படுத்துவதா என்று முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அதிகரிக்கும் கொரோனா தொற்று… முழு ஊரடங்கை நோக்கி நகரும் பெங்களூரு! – எடியூரப்பா அவசர ஆலோசனைபல அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், மருத்துவர்கள் நகரம் முழுவதும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று கூறி வருவதால் பெங்களூரு நகரம் முழுக்க ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளதாகவே அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.