ஆன்லைனில் இ-பாஸ் விண்ணப்பிப்பது எப்படி?

 

ஆன்லைனில்  இ-பாஸ் விண்ணப்பிப்பது எப்படி?

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு நீட்டிப்புடன் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 5441 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். சென்னையை பொறுத்தவரை 1752 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. கொரோனாவை கட்டுப்படுத்த முகக் கவசம் அணிய வேண்டும் , தனிமனித இடைவெளி வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆன்லைனில்  இ-பாஸ் விண்ணப்பிப்பது எப்படி?

கொரோனா அதிகரிப்பை கட்டுப்படுத்தும் நோக்குடன் அரசு அறிவித்த கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலாகிறது. வழிபாட்டு தலங்களில் இரவு 8 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். திருவிழா உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் பிற மாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகளில் நின்று கொண்டு பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.வெளிமாநிலங்கள் அல்லது வெளிநாடுகளில் இருந்து வருவோர் இபாஸ் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த சூழலில் இபாஸ் எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து இந்த செய்தியில் காணலாம்.

ஆன்லைனில்  இ-பாஸ் விண்ணப்பிப்பது எப்படி?

*இ-பாஸ் விண்ணப்பிக்க https://eregister.tnega.org/ என்ற இணையதளத்தை அணுகலாம்.

*மேற்கூறிய இணையத்தில் சென்றால், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருகிறீர்களா? அல்லது வெளிநாட்டில் இருந்து தமிழகம் வருகிறீர்களா? என்ற கேள்வி இடம்பெற்றிருக்கும்.

*அதில் உங்கள் தேர்வை கிளிக் செய்தால் உங்கள் செல்போன் எண் கேட்கும். பிறகு அந்த நம்பருக்கு OTP வரும். அதை பதிவு செயுங்கள்.

*பின்னர் பயணிகளின் பெயர், வயது, எங்கிருந்து வருகிறீர்கள், செல்லும் இடம், காரணம் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட வேண்டும். இதை பூர்த்தி செய்த உடன் உங்கள் செல்போனுக்கு இ-பாஸ் வந்துவிடும். குறிப்பாக நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்லும் போது கூட இ-பாஸ் வைத்திருப்பது கட்டாயம்.