செல்போன் பயன்பாடு அதிகரிப்பால் குழந்தைகளுக்கு ஆபத்து!

 

செல்போன் பயன்பாடு அதிகரிப்பால் குழந்தைகளுக்கு ஆபத்து!

செல்போன்… இன்றைய சூழலில் எல்லோர் வீடுகளில் இருக்கும் ஒரு முக்கியப் பொருள். ஆன்ட்ராய்டு செல்போன்கள் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லுமளவுக்கு பல்கிப்பெருகிக் கிடக்கின்றன. அம்மா, அப்பா, மகன், மகள் என நான்குபேர் இருக்கும் வீட்டில் ஆளுக்கொரு செல்போன் இருக்கிறது. சில நேரங்களில் இந்த செல்போன்கள் உதவிகரமாக இருந்தாலும், பல நேரங்களில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

செல்போன் பயன்பாடு அதிகரிப்பால் குழந்தைகளுக்கு ஆபத்து!ஸ்மார்ட்போன்:
சில ஆண்டுகளுக்கு முன் குழந்தைகளை சமாதானப்படுத்த செல்போன்களைக் காட்டுவார்கள். ஆனால், இன்றைக்கு அந்தக் குழந்தைகளின் கைகளில் செல்போனைக் கொடுத்து அதில் படங்களையோ, வீடியோக்களையோ காட்ட வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் அந்தக் குழந்தைகள் சமாதானமடைவதில்லை. மேலும், இன்றைக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஸ்மார்ட்போன்களில் பாடம் நடத்துவது அதிகரித்துவருகிறது. ஆகவே, செல்போன் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

செல்போன் மட்டுமல்லாமல் டேப்லெட்டிலும் வீடியோக்கள் பார்ப்பது, கேம்ஸ் விளையாடுவது அதிகரித்துவிட்டது. நீண்டநேரம் செல்போன்களைப் பயன்படுத்துவதாலும், அடிக்கடி இருட்டில் இருந்தபடி பார்ப்பதாலும் கண் கருவிழியான கார்னியா பாதிப்புக்குள்ளாகிறது. சருமத்தின் மேல்பகுதியான எபிடெர்மிஸ் பகுதி செல்போன் கதிர்களால் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாவதால் அதிக வெப்பத்தை தாங்கும் திறன் குறையும். இதனால் நாளடைவில் சருமத்தில் வறட்சி ஏற்பட்டு தோல் சிவந்து அரிப்புகள் ஏற்படலாம்.

செல்போன் பயன்பாடு அதிகரிப்பால் குழந்தைகளுக்கு ஆபத்து!எலும்புத் தேய்மானம்:
ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்துவதால் குழந்தைகளின் முதுகெலும்பு மற்றும் தசைகள் பாதிப்புக்குள்ளாகின்றன. இந்தப் பிரச்சினைகளுக்கு தற்காலிக தீர்வு காண்கின்றனர். ஆனால், செல்போன் பயன்பாடு தொடரும்பட்சத்தில் எலும்புகள் தேய்மானமாகி விடும். இது பிற்காலத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

செல்போனை நீண்டநேரம் பயன்படுத்துவதால் அதிலிருந்து வெளியேறும் ரேடியேஷன் உடலில் அதிகச் சூட்டை உண்டாக்கும். அது மூளை, காது, இதயம் போன்ற முக்கிய உடல் உறுப்புகளைப் பாதிக்கும். சமீப காலங்களில் பல குழந்தைகளுக்கு செவித்திறன் குறைபாடு, மந்தமான செயல்பாடு மற்றும் இதயக்கோளாறுகள் அதிகரித்து வருவதற்கு இவையும் காரணங்களாக அமைகின்றன.

செல்போன் பயன்பாடு அதிகரிப்பால் குழந்தைகளுக்கு ஆபத்து!சத்துக் குறைபாடு:
சுத்தமில்லாத கைகளால் அடிக்கடி செல்போனை பயன்படுத்துவதால் கைகள் மூலம் செல்போனுக்கு கிருமிகள் பரவும். அதன்பிறகு அதை பயன்படுத்திக்கொண்டே உணவு உண்பதால் வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் உள்ளிட்ட உடல்நலக்குறைவுகள் ஏற்படலாம். குறிப்பாக தோல் சார்ந்த பிரச்சினைகள் வரலாம். இந்த அடிப்படையில்தான் செல்போன் மூலம் கொரோனா பரவும் என்ற செய்திகள் பரப்பப்பட்டன.

குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதால் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். ஆடி ஓடி விளையாட வேண்டிய வயதில் வீட்டுக்குள் முடங்கினால் அவர்களின் உடலியக்கச் செயல்பாடுகள் என்னாகும்? குறிப்பாக வெயிலின் மூலம் கிடைக்கும் வைட்டமின்கள் அவர்களுக்கு கிடைக்காமல்போவதால் ஊட்டச்சத்துக் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு குழந்தைகளை செல்போன் பயன்படுத்துவதைக் குறைக்க அறிவுறுத்த வேண்டும். குறிப்பிட்ட நேரங்கள் மட்டுமே செல்போன் பயன்படுத்தச் சொல்லுங்கள். அவர்களின் எதிர்கால நலன்கருதி பெரியவர்களும் செல்போன் பயன்படுத்துவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.