darbar
  • January
    29
    Wednesday

Main Area

Main



தமிழகத்தில் அதிகரிக்கும் சிறுநீரக செயலிழப்பு... ப்ரோட்டீன் பவுடர் காரணமா?

சிறுநீரக செயலிழப்பு
சிறுநீரக செயலிழப்பு

தமிழகத்தில் அண்மைக் காலமாக சிறுநீரக செயலிழப்பால் அவதியுறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது. அதிலும் குறிப்பாக ப்ரோட்டீன் பவுடர் எடுத்துக்கொள்பவர்களுக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
நம்முடைய உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் உறுப்பு சிறுநீரகம். அதுமட்டுமல்லாமல், ரத்த செல்கள் உற்பத்திக்கு சிறுநீரகம்தான் தூண்டுதலாக உள்ளது. உடலின் நீர் அளவு, உப்பு அளவு சரியாக இருக்க சிறுநீரகம்தான் காரணம். வாழ்க்கை முறை மாற்றம், துடிப்பான வாழ்க்கை முறை குறைவு போன்ற காரணங்களால் தமிழகத்தில் சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

kidney

நாட்டிலேயே சிறுநீரக செயலிழப்புக்கு ஆளாகி சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைக்காகக் காத்திருப்பவர்கள் பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
உணவில் உப்பு அதிகம் சேர்ப்பது, சுய மருத்துவம், வலி நிவாரணிகள் அதிகம் எடுத்துக்கொள்வது, சுவையூட்டி சேர்க்கப்பட்ட ஹோட்டல் உணவுகள் சாப்பிடுவது, போதுமான அளவு தண்ணீர் அருந்தாமை, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் என்ற பல்வேறு காரணங்களால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது. சர்க்கரை நோய் வந்துவிட்டால் கட்டுப்பாட இருக்க வேண்டும். இல்லை என்றால் அவர்களுக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது. இதனுடன் அதிர்ச்சியாக உடலை உறுதியாக்க உடற்பயிற்சி செய்பவர்கள் ப்ரோட்டீன் பவுடர் எடுத்துக்கொள்கின்றனர். அதுவும் கூட சிறுநீரகத்தைச் செயலிழக்கச் செய்கிறது என்று கூறப்படுகிறது. 

kidney

சிறுநீரகம் செயலிழந்துவிட்டால் அதற்கு சிகிச்சை இல்லை. சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை ஒன்றே தீர்வு. அதுவரை வாரத்துக்கு இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு டயாலிசிஸ் செய்ய வேண்டியிருக்கும். இதுபோன்ற பாதிப்புகளிலிருந்து தப்பிக்க, தினசரி உடற்பயிற்சி, கட்டுப்பாடான உணவு, ஆண்டுக்கு ஒரு முறையாவது முழு உடற்பரிசோதனை செய்வதுடன், வலி நிவாரணிகளை மருத்துவர் பரிந்துரையின்றி எடுக்கக் கூடாது என்கின்றர் மருத்துவர்கள்.

2018 TopTamilNews. All rights reserved.