1,92,970 பேர் பாதிப்பு: பாகிஸ்தானிலும் கொரோனாவின் கோர தாண்டவம்!

 

1,92,970 பேர் பாதிப்பு: பாகிஸ்தானிலும் கொரோனாவின் கோர தாண்டவம்!

2019 ஆம் ஆண்டு டிசம்பர் சீனாவில் தொடங்கிய கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பேரிடர் காலத்திற்கு அழைத்து வந்துவிட்டது. இந்தியாவில் எதிர்பாராத அளவுக்குக் கொரோனா நோய் பாதிப்புத் தாக்கம் செலுத்தி வருகிறது. நம் அண்டை நாடான பாகிஸ்தானிலும் கொரோனா கோரத்தாண்டம் ஆடி வருகிறது.

1,92,970 பேர் பாதிப்பு: பாகிஸ்தானிலும் கொரோனாவின் கோர தாண்டவம்!

கடந்த ஏப்ரல் மாதம் 25 -ம் தேதி கொரோனா பாதிப்பு 12723 பேராக இருந்தது. மே மாதம் 25 -ம் தேதி 56349 நபர்களாக இருந்தது. ஜூன் 25-ம் தேதியில் 192970 நபர்கள் என மளமளவெனப் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துவிட்டது.

பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் 148 பேர் கொரோனாவில் மரணம் அடைந்துள்ளனர். இதுவரையிலான மொத்த பாதிப்பான 1,92,970 பேரில் 81,307 பேர் குணமடைந்துள்ளனர். 3,903 பேர் இறாந்துள்ளனர். இதன் வேகம் இன்னும் சில நாள்களில் அதிகரிக்கக்கூடும் என அச்சப்படுகின்றனர். இந்த எண்ணிக்கையின் அடிப்படையில் உலக அளவில் கொரோனா பாதிப்படைந்த நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் 14- வது இடத்தில் உள்ளது.

1,92,970 பேர் பாதிப்பு: பாகிஸ்தானிலும் கொரோனாவின் கோர தாண்டவம்!

பாகிஸ்தானின் சிந்து மாகாணம், பஞ்சாப் ஆகிய இரு பகுதிகளில் மட்டும் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 1,45,000 யைக் கடந்துவிட்டது. மற்ற பகுதிகளில் இந்தளவு எண்ணிக்கை அதிகரிக்க வில்லை என்றாலும் கணிசமான அளவு அதிகரித்தே வருகிறது.

கொரோனாவின் பரவலைக் கட்டுப்படுத்த முழு வீச்சில் அதிக எண்ணிக்கையில் பரிசோதனை செய்ய்ப்படுகிறது. இதுவரை 11.7 லட்சம் பேருக்குக் கொரோனா தொற்றுப் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டின் சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் நோய்த் தொற்று அதிகரித்து வந்தபோதும் இறப்பு விகிதம் கட்டுக்குள் இருப்பது குறிப்பிடத்தக்கது.