செங்கல்பட்டில் அதிகரித்த கொரோனா… ஈ.சி.ஆர், மாமல்லபுரத்தில் தயாராகும் 1000 படுக்கை வசதி! – கலெக்டர் ஆய்வு

 

செங்கல்பட்டில் அதிகரித்த கொரோனா… ஈ.சி.ஆர், மாமல்லபுரத்தில் தயாராகும் 1000 படுக்கை வசதி! – கலெக்டர் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் கூடுதலாக 1000 படுக்கை வசதிகள் ஏற்படுத்துவது தொடர்பாக கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

செங்கல்பட்டில் அதிகரித்த கொரோனா… ஈ.சி.ஆர், மாமல்லபுரத்தில் தயாராகும் 1000 படுக்கை வசதி! – கலெக்டர் ஆய்வுசெங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதனால் செங்கல்பட்டு மருத்துவமனை நிரம்பி வழிகிறது. மருத்துவமனைகளில் கொரோனோ நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியவில்லை. எனவே, வேறு ஒரு இடத்தில் புதிதாக கொரோனா மருத்துவமனை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

செங்கல்பட்டில் அதிகரித்த கொரோனா… ஈ.சி.ஆர், மாமல்லபுரத்தில் தயாராகும் 1000 படுக்கை வசதி! – கலெக்டர் ஆய்வுஇந்த நிலையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை அளிக்க வட்டார மருத்துவமனைகளில் படுக்கை வசதி ஏற்படுத்துவது தொடர்பாக கலெக்டர் ஜான் லூயிஸ் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
கிழக்கு கடற்கரைச் சாலை, பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள தனியார் கல்லூரிகள் தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டு வருகின்றன. இங்கு படுக்கை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படுவது பற்றி அவர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் மாமல்லபுரம் மருத்துவமனை உள்ளிட்ட வட்டார மருத்துவமனைகள், கல்லூரிகளில் கூடுதலாக 1000ம் படுக்கை வசதியை ஏற்படுத்தும் பணியையும் ஆய்வு செய்தார். விரைவில் இந்த பணிகள் முடிவடையும் என்று தெரிகிறது.