சென்னையில் அதிகரிக்கும் கார்பன் மாசு… 2015 வெள்ளத்தை விட பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு! – சென்னை ஐஐடி எச்சரிக்கை

 

சென்னையில் அதிகரிக்கும் கார்பன் மாசு… 2015 வெள்ளத்தை விட பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு! – சென்னை ஐஐடி எச்சரிக்கை

சென்னையில் அதிகரித்துவரும் கார்பன் மாசு காரணமாக பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றம் அதிகரித்து வருகிறது. இது சென்னையில் மிகப்பெரிய மழை, வெள்ள பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

சென்னையில் அதிகரிக்கும் கார்பன் மாசு… 2015 வெள்ளத்தை விட பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு! – சென்னை ஐஐடி எச்சரிக்கைசென்னை ஐஐடியில் பருவகால மாறுதல் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் பெருமழை பெய்தபோது சுற்றுச் சூழலில் ஏற்பட்ட மாறுதல்களை அவர்கள் கணக்கிட்டு வந்துள்ளனர். இதன் படி 2015 டிசம்பர் 4ம் தேதி பசுமை இல்ல வாயுக்கள் வெளியீடு மிக அதிக அளவில் இருந்துள்ளது. டிசம்பர் 2 முதல் 4ம் தேதி வரை வாயுக்கள் வெளியீட்டில் 70.8 சதவிகிதம் அளவுக்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பசுமை இல்ல வாயுக்கள் வெளிப்படுவது அதிகரிக்கும்போது எல்லாம் சென்னையில் பெருமழை பெய்துள்ளதாக கண்டறிந்துள்ளனர்.

தரை வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம் உள்ளிட்டவற்றில் மாற்றம் ஏற்படும்போது மழை அளவு அதிகரிக்கிறது. சென்னையில் தொடர்ந்து கார்பன் மாசு அதிகரித்துக் கொண்டே சென்றால் 2015ம் ஆண்டில் ஏற்பட்டதைக் காட்டிலும் மிக மோசமான வெள்ள பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர்.