உங்கள் உடலில் ஆக்சிஜனை அதிகரிக்க குப்புறப்படுங்கள் போதும்…!

 

உங்கள் உடலில் ஆக்சிஜனை அதிகரிக்க குப்புறப்படுங்கள் போதும்…!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது . ஒருபுறம் ஆக்சிஜன் பற்றாக்குறை, மறுபுறம் மருத்துவ சேவைகளில் குறைபாடு என மக்களுக்கு எதிராக போராடி வருகிறார்கள் . அதேசமயம் பலர் மருத்துவமனைகளுக்கு செல்லாமல் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டு இருப்பவர்கள் உடல் வெப்பநிலை, உடலில் ஆக்சிஜன் அளவு போன்றவற்றை போதுமான இடைவெளியில் தொடர்ந்து பரிசோதனை கொள்ள வேண்டியது அவசியம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது.

உங்கள் உடலில் ஆக்சிஜனை அதிகரிக்க குப்புறப்படுங்கள் போதும்…!

இதனால் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டிருப்பவர் ஒருவேளை உங்களுக்கு மூச்சுத் திணறல் , ஓரளவு உடலில் ஆக்சிஜன் குறைபாடு இருப்பதாக தெரிந்தால் குப்புறப்படுத்து அதனை அதிகரிக்கலாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலின், முகம் , வயிறு கீழ் நோக்கி இருக்குமாறு கிடப்பதுதான் குப்புறப்படுக்கும் முறை.

சுவாசம் மற்றும் பிராணவாயு செல்வதில் முன்னேற்றமடைய செய்ய குப்புறப்படுப்பது மருத்துவ ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலை

உங்கள் உடலில் ஆக்சிஜனை அதிகரிக்க குப்புறப்படுங்கள் போதும்…!

இது சுவாச பிரச்சனை உள்ள உறவு நோயாளிகளுக்கு பயனளிக்கக் கூடியது குறிப்பாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் போது குப்புறப்படுத்து மிகவும் நல்லது

சாப்பிட்ட பின் ஒரு மணி நேரத்திற்கு குப்புறப்படுப்பது தவிர்க்கவும். உங்களால் முடிந்தவரை 16 மணி நேரம் தங்கள் வசதிப்படி பல சுற்றுக்களாக குப்புறப்படுக்கலாம். காயம் உள்ள இடத்தில் அழுத்தம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளவும். முக்கியமாக எலும்பு பகுதிகளை சுற்றி கவனமாக இருக்கவும்.

குப்புறப்படுப்பது முக்கியத்துவம்

உங்கள் உடலில் ஆக்சிஜனை அதிகரிக்க குப்புறப்படுங்கள் போதும்…!

குப்புறப்படுப்பது சுவாசத்தை மேம்படுத்துகிறது நுரையீரல்களில் உள்ள சிறு காற்று அறைகளை திறக்க செய்து சுவாசத்தை எளிதாக்குகிறது.

நோயாளி சுவாசிக்க சிரமப்படும் போது மற்றும் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 94 குறையும் போது மட்டும் குப்புறப்படுப்பது தேவைப்படுகிறது. இருக்கும் போது ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு உடல் வெப்பம் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு ஆகியவற்றை சீரான இடைவெளியில் கண்காணிப்பது அவசியம்

உங்கள் உடலில் ஆக்சிஜனை அதிகரிக்க குப்புறப்படுங்கள் போதும்…!

ஆக்சிஜன் சுழற்சியை தவறவிடுவது நிலைமையை மோசமாக்கும்

சரியான நேரத்தில் குப்புறப் படுப்பது மற்றும் நல்ல காற்றோட்டத்தை பராமரிப்பது பல உயிர்களை காப்பாற்றும்.

உங்கள் உடலில் ஆக்சிஜனை அதிகரிக்க குப்புறப்படுங்கள் போதும்…!

அதேசமயம் கர்ப்பமாக இருப்பவர்கள் , இதயத்தில் பெரிய அளவு பிரச்சனை இருப்பவர்கள், முதுகு தண்டில் பிரச்சனை அல்லது இடுப்பு எலும்பு முறிவு உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பவர்கள் குப்புறப்படுத்து தவிர்த்தல் வேண்டும் . அதேபோல் நரம்பில் ரத்த உறைவு சிகிச்சை பெற்று 48 மணி நேரத்திற்கு குப்புறப் படுக்கக் கூடாது.