5,53,471 – கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

 

5,53,471 – கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா நோய்த் தொற்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சீனாவில் தொடங்கியது. கடும் பாதிப்பை விளைவித்த இந்நோய் தொற்று அடுத்து உலகம் முழுவதும் பாதிக்கத் தொடங்கியது. அமெரிக்கா, ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகள் கூட கொரோனா நோய்த் தொற்றைச் சமாளிக்கப் படாதபாடு பட்டு வருகின்றன.

இந்தியாவில் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா நோய்த் தொற்றல் அதிகரித்தது. அது விரைவாக அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை விளைவித்து வருறது.

5,53,471 – கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இன்றைய (ஜூலை 13) காலை நிலவரப்படி இந்திய அளவில் கொரோனோ நோய்த் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,78,254 (எட்டு லட்சத்து எழுபத்தியெட்டு ஆயிரத்து இருநூற்று ஐம்பத்தி நான்கு) பேர். நாள்தோறும் கொரோனா பாதிப்போரின் எண்ணிக்கை உயர்வது கவலை அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. நேற்று மட்டுமே 503 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

5,53,471 – கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இத்தனை கவலை அளிக்கும் செய்திகள் வந்தவண்ணம் இருந்தாலும், ஆறுதல் அளிக்கும் விதமாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. கொரோனா நோய் பாதிப்பிலிருந்து 5,53,471 (ஐந்து லட்சத்த் ஐம்பத்தி மூவாயிரத்து நானூற்று எழுபத்தி ஏழு) பேர் குணம் அடைந்து வீடு திரும்பியிருக்கின்றனர்.

தமிழகத்திலும் கொரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. சென்னையில் முந்தைய வாரத்தை விட குறைவாக நோய்த் தொற்றுடைவர்களின் எண்ணிக்கை இருந்தாலும் ஆயிரத்துக்கு குறைய வில்லை என்பது கவலை தரக்கூடியது. கொரோனா பாதிப்பில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் மகாராஷ்டிராவும் மூன்றாம் இடத்தில் டெல்லியும் உள்ளது.