அமெரிக்காவை விட இந்தியாவில் டபுள் – புதிய நோயாளிகள் எண்ணிக்கை #CoronaUpdates

அமெரிக்காவை விட இந்தியாவில் டபுள் – புதிய நோயாளிகள் எண்ணிக்கை #CoronaUpdates

செப்டம்பர் 3-ம் தேதி நிலவரப்படி நிலவரப்படி,  உலகளவில் கொரோனாவின் பாதிப்பு எவ்வளவு, குணம் அடைந்தவர்கள், மரணம் அடைந்தவர்கள் உள்ளிட்ட விவரங்களைப் பார்ப்போம்.  

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 62 லட்சத்து  10 ஆயிரத்து 074 பேர்.   

அமெரிக்காவை விட இந்தியாவில் டபுள் – புதிய நோயாளிகள் எண்ணிக்கை #CoronaUpdates

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 1 கோடியே 84 லட்சத்து 68 ஆயிரத்து 960 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 8 லட்சத்து 68 ஆயிரத்து 038 பேர்.  இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள்.   

தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 68,73,076 பேர். இவர்களில் 99 சதவிதத்தினர்  லேசான அறிகுறிகளோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் இருக்கு 1 சதவிகிதத்தினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் நிலை இருக்கிறது.

அமெரிக்காவை விட இந்தியாவில் டபுள் – புதிய நோயாளிகள் எண்ணிக்கை #CoronaUpdates

கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது  அமெரிக்காவில் 62,91,099 பேரும், பிரேசில் நாட்டில்  40,01,422  பேரும் இந்தியாவில் 38,53,406 பேரும் கொரோனவால்  பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இது இன்றைய நிலவரம், நேற்றைய நிலவரத்தின் அப்டேட்டில் பார்க்கும்போது, புதிய நோயாளிகள் அதிகரித்திருப்பது உலகளவில் இந்தியாவில்தான் என்கிற அதிர்ச்சி தகவல் தெரிகிறது.

அமெரிக்காவை விட இந்தியாவில் டபுள் – புதிய நோயாளிகள் எண்ணிக்கை #CoronaUpdates

அமெரிக்காவில் 41,211 பேரும், பிரேசிலில் 48,632 பேரும் புதிய நோயாளிகளாக அதிகரித்திருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் 82,860 பேராக அதிகரித்துள்ளனர். நேற்று இறந்தோர் எண்ணிக்கையும் அமெரிக்கா, பிரேசில் நாடுகளை விடவும் இந்தியாவில் அதிகம்.

அமெரிக்காவின் புதிய நோயாளிகளின் எண்ணிக்கையோடு இந்தியாவை ஒப்பிட்டு பார்த்தால் இரு மடங்கு அதிகம்.