மதுரையில் கொரோனா பாதிப்பு ஒரே வாரத்தில் இரட்டிப்பானது

 

மதுரையில் கொரோனா பாதிப்பு ஒரே வாரத்தில் இரட்டிப்பானது

கொரோனா நோய்த்தொற்று கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவில் தொடங்கியது. அதன்பின் உலகம் எங்கும் அது பரவி நாள்தோறும் கொரோனா நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டில் இன்றைய நிலவரப்படி 67,468 பேருக்கு நோய்த்தொற்றியுள்ளது. இவர்களில் சுமார் 37,000 பேர் குணமாகி வீட்டுக்குத் திரும்பியுள்ளனர்.

மதுரையில் கொரோனா பாதிப்பு ஒரே வாரத்தில் இரட்டிப்பானது

சென்னையில் மட்டும் அதிகரித்துவந்த நோய்த் தொற்றுச் சமீபமாகத் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்த நிலையில் அங்கே முழு லாக்டெளன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்றைக்கு வெளியான கொரோனா பாதிப்பு பட்டியல் மூலம், மதுரையில் ஒரு வாரத்தில் நோய்த் தொற்றல் இரட்டிப்பானது தெரிய வந்திருக்கிறது. ஒரு வாரத்திற்கு முன் (ஜூன் 17) 493 பேர் என்றிருந்த நிலையில், இன்று (ஜூன் 24) மட்டும் 97 பேருக்கு நோய் தோற்றி மொத்த எண்ணிக்கை 1073 ஆக அதிகரித்திருக்கிறது. இந்த எண்ணிக்கையில் 405 பேர் இதுவரை கொரோனாவிலிருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது சிகிச்சையில் 574 பேர் உள்ளனர்.

மதுரையில் கொரோனா பாதிப்பு ஒரே வாரத்தில் இரட்டிப்பானது

இந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்துவிடாதிருக்க மாவட்ட நிர்வாகம் லாக்டெளன், பேருந்துகளை நகருக்குள் வர விடாமல் செய்வது, கடைகள் திறக்கும் நேரத்தை ஒழுங்குக்குள் வைத்திருப்பது, வீட்டை விட்டு வெளியே வரும் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் உள்ளிட்ட பல வழிகளைக் கையாண்டு வருகிறது.