சென்னை ஐஐடியில் கொரோனா தொற்று அதிகரிப்பு : காரணம் இதுதான்…!

 

சென்னை ஐஐடியில் கொரோனா தொற்று அதிகரிப்பு : காரணம் இதுதான்…!

சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனா பரவியது குறித்து இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 9ம் தேதி ஐஐடி வளாகத்தில் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்த 444 மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 87 மாணவர்களுக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மொத்தம் 104 நபருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடியில் கொரோனா தொற்று அதிகரிப்பு : காரணம் இதுதான்…!

ஐஐடியில் கொரோனா அதிகரித்து வந்த சூழலில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி துணை ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் நேரில் ஆய்வு நடத்தினர்.

சென்னை ஐஐடியில் கொரோனா தொற்று அதிகரிப்பு : காரணம் இதுதான்…!

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ‘ஐஐடியில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நமக்கு ஒரு பாடம். தமிழகத்தில் பரவல் குறையும் நிலையில் இப்படி குவியலாக தொற்று ஏற்பட்டுள்ளது. மற்ற மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். ஐஐடி நிறுவனத்தில் போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்றும் தெரிவித்தார். இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி, பாதுகாப்பு விதிமுறைகளை மாணவர்கள் முறையாக பின்பற்றவில்லை. இதனால் தான் தொற்று பரவியுள்ளது என்றார்.