Home தமிழகம் கிராமங்களில் தொழில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் - வர்த்தக தலைவர்களிடம் சத்குரு வலியுறுத்தல்!

கிராமங்களில் தொழில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் – வர்த்தக தலைவர்களிடம் சத்குரு வலியுறுத்தல்!

வேலை தேடி மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்வதை தடுக்க கிராமங்களில் தொழில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். அங்குள்ள இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து நிறுவனங்களின் சி.இ.ஓக்களாக வளர்த்தெடுக்க வேண்டும் என்று வர்த்தக தலைவர்களிடம் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வலியுறுத்தினார்.

கிராமங்களில் தொழில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் - வர்த்தக தலைவர்களிடம் சத்குரு வலியுறுத்தல்!
கிராமங்களில் தொழில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் - வர்த்தக தலைவர்களிடம் சத்குரு வலியுறுத்தல்!

ஈஷா லீடர்ஷிப் அகாடமி சார்பில் ‘Human is not a Resource’6 என்ற வருடாந்திர கருத்தரங்கு ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. இதில் 11 நாடுகளைச்சேர்ந்த 150 வர்த்தக தலைவர்கள் பங்கேற்றனர். இந்த வர்த்தக கலந்துரையாடலில் பேசிய சத்குரு, உலகம் முழுவதும் உள்ள தொழில் முதலீடுகளில் பெரும்பகுதி 25 முதல் 30 முக்கிய நகரங்களில் மட்டுமே முதலீடு செய்யப்படுகிறது. இதனால், 160 கோடி (1.6 பில்லியன்) மக்கள் வேலைவாய்ப்பிற்காக நகரங்களுக்கு இடம் பெயர வேண்டியுள்ளது. மக்கள் எங்கு வாழ்கிறார்களோ, அங்கு தான் தொழில் வளர்ச்சி நடக்க வேண்டும்.

கிராமங்களில் தொழில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் - வர்த்தக தலைவர்களிடம் சத்குரு வலியுறுத்தல்!

தொழில் வளர்ச்சிக்காக மக்களை இடம்பெயர செய்வது சரியான முறை அல்ல. எனவே, இந்த பிரச்சினைக்கு தீர்வு காண, கிராமப்புறங்களில் தொழில் வாய்ப்புகளை அதிகளவு உருவாக்க வேண்டும். அதற்கு, நீங்கள் உங்கள் நிறுவனத்தின் மொத்த முதலீட்டில் குறைந்தப்பட்சம் 10 முதல் 15 சதவீதத்தையாவது கிராமங்களில் முதலீடு செய்ய வேண்டும். தொழில்துறையின் தேவைக்கேற்க அந்தந்த கிராமங்களில் உங்கள் நிறுவனத்தின் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்களை அமைத்து இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அவர்களுக்குள் மறைந்து இருக்கும் திறமைகளை கண்டறிந்து உங்கள் நிறுவனத்தின் சி.இ.ஓக்களாக உயரும் அளவிற்கு அவர்களை வளர்தெடுக்க வேண்டும். மனிதர்களின் அனைத்து செயல்பாடுகளிலும் மனிதத்தன்மை கொண்ட இது போன்ற அம்சங்கள் மிகவும் அவசியம் என்று சத்குரு கூறினார்.

வேலைவாய்ப்பிற்காக நகரங்களுக்கு இடம் பெயர்ந்த கோடிக்கணக்கான மக்கள் கரோனா காலத்தில் சந்தித்த அவலங்கள் இங்கு நினைவுகூறத்தக்கது. சத்குரு கூறுவது போல், கிராமப்புறங்களில் தொழில்வாய்ப்புகளை விரிவுப்படுத்துவதன் மூலம் இதுபோன்ற துயரங்களையும், பாதிப்புகளையும் நம்மால் குறைக்க முடியும். முன்னதாக, இந்த 3 நாள் ஆன்லைன் கலந்துரையாடல் நிகழ்வில், தென்மேற்கு பிராந்தியத்தின் முன்னாள் ராணுவ தளபதி லெப்டினெண்ட் ஜெனரல் திரு.அலோக்லேர், இண்டிகோ நிறுவனத்தின் மூத்த துணைதலைவர் திரு.ராஜ்ராகவன் உள்ளிட்ட வர்த்தக தலைவர்கள் பங்கேற்று உரை நிகழ்த்தினர்.

கிராமங்களில் தொழில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் - வர்த்தக தலைவர்களிடம் சத்குரு வலியுறுத்தல்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

பெண் காவலரின் உயிரை பறித்த கொரோனா… பரிதவிக்கும் பச்சிளங்குழந்தை!

சென்னையை சேர்ந்த பெண் காவலர் ஒருவர் குழந்தையை பெற்றெடுத்த மறுநாளே கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் வசித்து வரும்...

சென்செக்ஸ் 123 புள்ளிகள் உயர்ந்தது… ரூ.15 ஆயிரம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 123 புள்ளிகள் உயர்ந்தது. இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம்...

கேரளாவுக்கு லாரியில் கடத்திய 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

கன்னியாகுமரி குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே கேரளாவுக்கு லாரியில் கடத்தமுயன்ற 10 டன் ரேஷன் அரிசியை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கன்னியாகுமரி...

“வரலாறு படைத்துள்ளீர்கள்” – ஹாக்கி கேப்டனுக்கு சர்ப்ரைஸ் கால் செய்து வாழ்த்திய பிரதமர் மோடி!

ஹாக்கியை உருவாக்கியது என்னவோ இந்தியா தான். ஆனால் நம்மிடம் ஆட்டத்தைக் கற்றுக்கொண்டு உலகின் பல நாடுகள் சர்வதேச அரங்கில் நம்மை விஞ்சி நிற்கின்றனர். நாமோ காலிறுதிக்குள் செல்வதே பெரும் சாகசமாக...
- Advertisment -
TopTamilNews