வருமான வரி தாக்கல் செய்ய – டிசம்பர். 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

 

வருமான வரி தாக்கல் செய்ய – டிசம்பர். 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

2018-19ம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்படுவது இது 5வது முறையாகும். கொரோனா தொற்று பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தினால், நாடெங்கிலும் வரி செலுத்துவோர் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகினர். இதனை கருத்தில் கொண்டு, 2018-19ம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

வருமான வரி தாக்கல் செய்ய – டிசம்பர். 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

ஏற்கனவே, கடந்த மார்ச் 31ம் தேதியாக இருந்த இறுதி தேதி, ஜூன் 30ம் தேதியாகவும், பின்னர் அது ஜூலை 31ம் தேதியாகவும் நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து கால அவகாசம் 3வது முறையாக செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து நவம்பர் 30 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை கூடுதலாக 2 மாதங்களுக்கு வருமான வரித்துறை நீட்டித்துள்ளது. அதன்படி வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யலாம் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.