`இன்பத்துரைக்கு கல்தா; தென் மாவட்டத்தில் புறக்கணிக்க சாதி!’- அதிமுக மாவட்ட செயலாளர்கள் நியமனத்தில் என்ன நடந்தது?

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற ஓராண்டிற்கும் குறைவான நாட்களே இருக்கின்றன. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களை தயார்படுத்திக் கொள்ளும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. இப்போதாவது கட்சி பணிகளிலும் கொஞ்சம் ஆர்வம் காட்டினால்தான் வருகிற சட்டமன்ற தேர்தலை சந்திக்க முடியும். தற்போது அதிமுக மாவட்ட செயலாளர்களாக உள்ள பலர் அமைச்சர்களாகவும் உள்ளனர்.

கடந்த எம்பி தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இதற்கு மாவட்ட செயலாளர்கள் மற்றும் அந்த மாவட்டங்களில் உள்ள கோஷ்டி பூசல்கள்தான் காரணம். அதனால் சில மாவட்ட செயலாளர்களை மாற்றி, மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ளவர்களை மாவட்ட செயலாளர்களாக நியமிக்க அதிமுக தலைமை திட்டமிட்டது. அதனால்தான் அந்தந்த மாவட்டங்களில் இருந்து கட்சி தலைமைக்கு வந்துள்ள புகார் மனுக்களை ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கியது. இதில் அதிக புகார் வந்துள்ள மாவட்ட செயலாளர்கள் மீது ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகள் குவிந்தது. அந்த வகையில் நிர்வாக ரீதியில் பல்வேறு மாற்றங்களை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அதிரடியாக கொண்டு வந்துள்ளனர். அதன்படி அமைப்பு ரீதியாக கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, மத்திய என 5 மாவட்டங்களாக தமிழ்நாடு பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கு மாவட்டச் செயலாளர்களும் நியமித்துள்ளனர்.

இதுவரை, ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்கள்தான் கட்சியிலும், ஆட்சியிலும் பதவியில் இருக்கிறார்கள். இனி அந்த நிலை மாற்றப்பட்டு, தற்போதுள்ள கட்சி தலைமைக்கும், அந்தந்த மாவட்ட அதிமுக தொண்டர்களுக்கும் உண்மையான விசுவாசத்துடன் இருப்பவர்களுக்கே கட்சி பதவி வழங்கப்பட்டுள்ளது என்று கூறும் ரத்தத்தின் ரத்தங்கள், சாதி ஓட்டுகளை பெறுவதற்காகவே தென் மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் தென் மாவட்டங்களில் அதிக வாக்கு வங்கிகளாக உள்ள கிறிஸ்தவ நாடார்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அண்மையில் அறிவிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியலில் குறிப்பிட்ட தங்கள் சமுதாயம் கண்டுகொள்ளப்படவில்லை என்று அதிமுக மேலிடத்திற்கு அதிருப்தி மேல் அதிருப்தி கடிதங்கள் சென்றுள்ளன. நாடார்கள் அதிகம் உள்ள தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டங்களுக்கு நாடார்களை மாவட்டச் செயலாளர் ஆக்கியுள்ளது.

இதே போல் தேவர்கள், நாயக்கர்கள் போன்றோருக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நாடார்களுக்கு கொடுக்கப்பட்ட பிரதிநிதித்துவம் கிறிஸ்தவ நாடார்களுக்கு கொடுக்கப்படவில்லை என்று கட்சிக்குள் விமர்சனம் எழுந்துள்ளது. தென்மாவட்டங்களில் தூத்துக்குடி, கன்னியாகுமரியில் கிறிஸ்தவ நாடார்கள்தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுக தோல்வியை சந்தித்தது. இது குறித்து கிறிஸ்தவ நாடாரும் ராதாபுரம் தொகுதி எம்எல்ஏவுமான இன்பதுரை பல முறை கட்சி மேலிடத்திற்கு எடுத்துக் கூறியுள்ளார். சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் கிறிஸ்தவ நாடார்களை ஈர்க்கும் வகையில் சில திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் இன்பதுரை தொடர்ந்து முதல்வர் எடப்பாடியிடம பேசி வருகிறாராம். முதல்வர் எடப்பாடியுடன் நெருக்கமாக இருப்பவர்களில் ஒருவர் இன்பதுரை.

சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைக்கும் இன்பத்துரை

இதனால் தனக்கு நெல்லை மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு பதவி கொடுக்கப்படவில்லை. இது ஒரு புறம் இருக்க, எம்எல்ஏ தேர்தலில் வெற்றி பெற்ற பிரச்னை நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில் எம்எல்ஏ பதவியே கேள்விக்குறியாகி உள்ள நிலையில் மாவட்டச் செயலாளர் பதவி கொடுத்தால் அவர் சிறப்பாக செயல்படுவாரா? என்று எழுந்த கேள்வி தான் அவருக்கு பதவி கொடுப்பதை தடுத்துவிட்டதாகவும் சொல்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். இதனிடையே, மாவட்டச் செயலாளர்கள் நியமனத்தில் கிறிஸ்தவ நாடார்கள் புறக்கணிக்கப்படுவதாக கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே கூட்டணியில் பாஜக இருப்பதால் அதிமுக மீது அதிருப்தியில் இருக்கும் கிறிஸ்தவ நாடார்கள், தற்போது மாவட்டச் செயலாளர்கள் நியமனத்திலும் தங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரவில்லை என்று தங்களது குமுறலை வெளிப்படுத்துகின்றனர்.

Most Popular

தமிழகத்தில் பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது: குணமடைந்தோர் 2,44,675 பேர்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குணமடைந்தோர் 2,44,675 பேர் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. 3,02,815 பேர் தமிழகத்தில் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும்...

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 114 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 114 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு 3,02,815 பேர் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும் 1,10,121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....

தமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை -976, செங்கல்பட்டு -483, அரியலூர் -54, கோவை -392, கடலூர் -287, தருமபுரி -18, திண்டுக்கல் -173, ஈரோடு -37, கள்ளக்குறிச்சி...

செப்., 30 வரை ரயில்கள் ரத்து இல்லை! ரயில்வே அமைச்சகம் மறுப்பு!

நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், மெயில், விரைவு ரயில்கள், பயணிகள் மற்றும் புறநகர் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று வெளியான...