பா.ஜ.க.விலிருந்து வருவர்களை சானிடைசர் தெளித்து கட்சியில் சேர்க்கும் மம்தா கட்சியினர்

 

பா.ஜ.க.விலிருந்து வருவர்களை சானிடைசர் தெளித்து கட்சியில் சேர்க்கும் மம்தா கட்சியினர்

மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.விலிருந்து மீண்டும் தங்கள் கட்சிக்கு வருபவர்களை மொட்டையடித்து, சானிடைசர் தெளித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் சேர்ப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் கடந்த சில ஆண்டுகளாக பா.ஜ.க. மக்கள் மத்தியில் கடும் செல்வாக்கு பெற்று வருகிறது. பா.ஜ.க.வின் வளர்ச்சியை பார்த்து திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த முகுல் ராய், சுவேந்து ஆதிகாரி உள்பட பல தலைவர்கள் பா.ஜ.க. பக்கம் தாவினர். அண்மையில் நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.

பா.ஜ.க.விலிருந்து வருவர்களை சானிடைசர் தெளித்து கட்சியில் சேர்க்கும் மம்தா கட்சியினர்
திரிணாமுல் காங்கிரஸ்

அதேசமயம் ஆட்சியை கைப்பற்றும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பா.ஜ.க. 80க்கும் குறைவான இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனையடுத்து திரிணாமுல் காங்கிரசிலிருந்து பா.ஜ.க.வுக்க தாவிய பலரும் மீண்டும் தாய் கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கு தாவ தொடங்கினர். முகுல் ராய் அண்மையில் மீண்டும் திரிணாமுல் காங்கிரசில் எந்த வித பிரச்சினையும் இல்லாமல் சேர்ந்தார். ஆனால் அதேபோல் மற்றவர்களுக்கு கட்சி தாவல் அவ்வளவு எளிதானதாக அமையவில்லை.

பா.ஜ.க.விலிருந்து வருவர்களை சானிடைசர் தெளித்து கட்சியில் சேர்க்கும் மம்தா கட்சியினர்
பா.ஜ.க.

அண்மையில் ஹூக்ளியில் 6 பா.ஜ.க.வினர் தங்களது தலையை மொட்டையடித்து கொண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று பிர்ஹம் மாவட்டத்தில் 150 பா.ஜ.க.வினர் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தனர். முன்னதாக அவர்கள் அனைவரின் மீது சானிடைசர் தெளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த உள்ளூர் தலைவர் இது குறித்து கூறுகையில், இந்த மக்களிடமிருந்து பா.ஜ.க. கிருமியை சுத்த செய்ய விரும்பினேன் என தெரிவித்தார்.