உத்தர பிரதேசத்தில் யமுனை நதியில் மிதக்கும் சடலங்கள்.. பீதியில் மக்கள்

 

உத்தர பிரதேசத்தில் யமுனை நதியில் மிதக்கும் சடலங்கள்.. பீதியில் மக்கள்

உத்தர பிரதேசத்தில் ஹரிம்பூர் மாவட்ட பகுதியில் யமுனை நதியில் சடலங்கள் மிதப்பது அந்த பகுதி மக்கள் பீதியை கிளப்பியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் மோசமாக உள்ளது. அந்த மாநிலத்தில் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு பல தகன மயானங்களில் இடம் இல்லாமல் உள்ளது.

உத்தர பிரதேசத்தில் யமுனை நதியில் மிதக்கும் சடலங்கள்.. பீதியில் மக்கள்
யமுனை நதி

இந்த சூழ்நிலையில் ஹமிர்பூர் மாவட்டத்தில் யமுனை நதியில் மிதக்கும் பல டஜன் உடல்களை அந்த உள்ளூர்வாசிகள் பார்த்தனர். இது அந்த பகுதி மக்களுக்கு பீதியை கிளப்பியுள்ளது. ஏனெனில் இந்த சடலங்கள் கொடிய தொற்று நோயான கொரோனா வைரசுக்கு பலியான கிராமவாசிகளின் உடல்களாக இருக்கலாம் என்று அவர்கள் சந்தேகித்தனர்.

உத்தர பிரதேசத்தில் யமுனை நதியில் மிதக்கும் சடலங்கள்.. பீதியில் மக்கள்
யமுனை நதி கரையில் தகனம் செய்யப்படும் சடலங்கள்

இது தொடர்பாக ஹமிர்பூர் உதவி போலீஸ் கண்காணிப்பாளர் அனூப் குமார் சிங் கூறுகையில், யமுனை நதி ஹமிர்பூருக்கும், கான்பூருக்கும் இடையிலான எல்லையாக பாய்கிறது. உள்ளூர்வாசிகள் நதியை புனிதமாக கருதுகின்றனர். மேலும் இந்த கிராமவாசிகளின் உடல்கள் ஆற்றில் மிதக்கப்படுவதற்கான பழைய சடங்கு உள்ளது. கோவிட்-19க்கு அஞ்சும் கிராமத்தினர் உடல்களை தகனம் செய்வதற்கு பதிலாக உடல்களை நதியில் மிதக்க விட விரும்புகின்றனர். இதன் விளையாக ஆற்றில் மிதக்கும் உடல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என தெரிவித்தார்.