தொழில் போட்டி எதிரொலி… அடிக்க ரூ.5,000, கொலைக்கு ரூ.55,000… உத்தர பிரதேசத்தில் ரவுடிகளின் விலை பட்டியல்

தொழில் போட்டி எதிரொலி… அடிக்க ரூ.5,000, கொலைக்கு ரூ.55,000… உத்தர பிரதேசத்தில் ரவுடிகளின் விலை பட்டியல்

உத்தர பிரதேசத்தில் ரவுடி கும்பல்களுக்கு இடையே போட்டி காரணமாக, காய்கறி விலை பட்டியல் போன்று, அடிக்க, கொலை செய்ய என்று தங்கள் செய்யும் குற்ற செயல்களுக்கு ஏற்ப விலை பட்டியல் வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசும், அம்மாநில காவல்துறையும் குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் ஆட்கடத்தல், கொள்ளை, கொலை, பாலியல் பலாத்காரம் போன்ற சம்பவங்கள் மிகவும் குறைந்தமாதிரி தெரியவில்லை. உத்தர பிரதேசத்தில் ரவுடி கும்பல்கள் அதிகமாக உள்ளது.

தொழில் போட்டி எதிரொலி… அடிக்க ரூ.5,000, கொலைக்கு ரூ.55,000… உத்தர பிரதேசத்தில் ரவுடிகளின் விலை பட்டியல்
முதல்வர் யோகி ஆதித்யநாத்

தொழில் போட்டி எல்லா துறையிலும் இருப்பது சகஜம் அதற்கு ரவுடி கும்பல்களும் விதிவிலக்கல்ல. உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் ஒரு ரவுடி கும்பல் தாங்கள் செய்யும் குற்ற செயல்களுக்கு, சந்தையில் காய்கறிகளுக்கு விலை பட்டியல் வைத்திருப்பது போல் விலை பட்டியல் தயார் செய்து வைத்துள்ளனர். அதாவது மிரட்டல் விடுக்க, அடிக்க, ஆட்கடத்தல், கொலை உள்பட தாங்கள் வழங்கும் குற்ற சேவைகளுக்கு ரூ.1,000 முதல் ரூ.55,000 வரை கட்டணம் நிர்ணயம் செய்துள்ளனர். அந்த விலை போஸ்டரில் அந்த ரவுடி கும்பலை சேர்ந்தவர்களின் படமும் இடம் பெற்றுள்ளது.

தொழில் போட்டி எதிரொலி… அடிக்க ரூ.5,000, கொலைக்கு ரூ.55,000… உத்தர பிரதேசத்தில் ரவுடிகளின் விலை பட்டியல்
குற்றம்

இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து போலீசார் இது குறித்து விசாரணையில் இறங்கினர். சவுகடா கிராமத்தை சேர்ந்தவர் இளைஞர்தான் அந்த போஸ்டரை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தார் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், அந்த போஸ்ட் காவல்துறையினரின் கவனத்துக்கு வந்தவுடன் அது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது, இந்த வழக்கில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.