வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தினால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம்… யோகி ஆதித்யநாத் அரசு அதிரடி

வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தினால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம்… யோகி ஆதித்யநாத் அரசு அதிரடி

நாளுக்கு நாள் சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேபோல் விபத்துக்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. வாகனத்தை ஓட்டும்போது செல்போனை பயன்படுத்துவது விபத்துக்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது. வாகனத்தை ஓட்டும்போது செல்போனில் பேசாதீர்கள் என மத்திய மற்றும் மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனாலும் வாகனம் ஓட்டும்போது வாகன ஓட்டிகள் செல்போனை பயன்படுத்துவது குறைந்த மாதிரி தெரியவில்லை.

வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தினால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம்… யோகி ஆதித்யநாத் அரசு அதிரடி
கடந்த ஆண்டு மோட்டார் வாகன திருத்த சட்டத்தின் மூலம் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபாரத்தை மத்திய அரசு கணிசமான அளவு அதிகரித்தது. தற்போது உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு அம்மாநிலத்தில் வாகனத்தை ஓட்டும் போது செல்போன் பயன்படுத்தினால் ரூ.10,000 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.

வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தினால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம்… யோகி ஆதித்யநாத் அரசு அதிரடி

கடந்த ஜூன் மாத மத்தியில் உத்தர பிரதேச அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் வாகன ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தினால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்க முடிவு எடுக்கப்பட்டது. தற்போது அதனை அம்மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அம்மாநில போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிவிக்கையில், வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தி முதல் முறை விதிமீறலில் ஈடுபட்டால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும், அதற்கு அடுத்து தொடர்ந்து விதிமுறை மீறல்களில் ஈடுபட்டால் ஒவ்வொரு முறையும் ரூ.10,000 அபராதம் வசூலிக்கப்படும். இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் இல்லாமல் சென்றால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.