தூத்துக்குடி
தூத்துக்குடி அருகே மனைவி உயிரிழந்த வேதனையில் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி அடுத்த கீழபூவாணி பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ். கூலி தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி. இவர்களின் மகன் மற்றும் மகள்களுக்கு திருமணமாகி தனியே வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு லட்சுமி கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தார். மனைவி உயிரிழந்ததால் மனமுடைந்த ராமதாஸ் மிகுந்த வேதனையில் இருந்து வந்துள்ளார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் தெரிவித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன் ராமதாஸ் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு மருத்துவர்கள் தீவிர அளித்தும் பலனளிக்காமல் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.