வங்கிகள் இணைப்பு எதிரொலி… பொதுத்துறை வங்கிகளின் 2,118 கிளைகளுக்கு மூடுவிழா..

வங்கிகள் இணைப்பு எதிரொலி… பொதுத்துறை வங்கிகளின் 2,118 கிளைகளுக்கு மூடுவிழா..

கடந்த நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகளின் 2,118 கிளைகள் மூடப்பட்டன அல்லது இணைக்கப்பட்டன என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த நிதியாண்டில் பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, சிண்டிகேட் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, இந்தியன் வங்கி மற்றும் அலகாபாத் வங்கி ஆகிய 10 பொதுத்துறை வங்கிகளை 4 பெரிய வங்கிகளாக மத்திய அரசு ஒருங்கிணைத்தது. இதனையடுத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை 12ஆக குறைந்தது. வங்கிகள் இணைப்பால் அருஅருகே உள்ள ஒரே வங்கி கிளைகள் மூடப்பட்டன அல்லது இணைக்கப்பட்டன.

வங்கிகள் இணைப்பு எதிரொலி… பொதுத்துறை வங்கிகளின் 2,118 கிளைகளுக்கு மூடுவிழா..
வங்கிகள் இணைப்பு

மத்திய பிரதேச மாநிலம் நீமுச் நகரை சேர்ந்த ஆர்வலர் சந்திர சேகர் கௌட், பொதுத்துறை வங்கிகள் இணைப்பு தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் மத்திய அரசிடம் கேள்வி கேட்டு இருந்தார். அவருக்கு கிடைத்தப்பதிலின்படி, கடந்த 2020-21ம் நிதியாண்டில் 10 பொதுத்துறை சேர்ந்த 2,118 கிளைகள் மூடப்பட்டன அல்லது இதர வங்கிகளின் கிளைகளுடன் இணைக்கப்பட்டன.

வங்கிகள் இணைப்பு எதிரொலி… பொதுத்துறை வங்கிகளின் 2,118 கிளைகளுக்கு மூடுவிழா..
தகவல் அறியும் உரிமை

கடந்த நிதியாண்டில் அதிகபட்சமாக பேங்க் ஆப் பரோடாவின் 1,283 கிளைகள் மூடவோ அல்லது இணைக்கவோ செய்யப்பட்டுள்ளன. அதேசமயம் பேங்க் ஆப் இந்தியா மற்றும் யூகோ வங்கி ஆகியவற்றின் எந்தவொரு கிளையும் அந்த கால கட்டத்தில் மூடப்படவில்லை.