‘வீட்டு வாசலில் வங்கி சேவை’… 70 நாள் லாக்டவுன் காலத்தில் ரூ.2 ஆயிரம் கோடி டெலிவரி செய்த போஸ்ட்மேன்கள்..

‘வீட்டு வாசலில் வங்கி சேவை’… 70 நாள் லாக்டவுன் காலத்தில் ரூ.2 ஆயிரம் கோடி டெலிவரி செய்த போஸ்ட்மேன்கள்..

இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் கடந்த செப்டம்பரில், வங்கி அல்லது வங்கியில்லாத பகுதிகளில் எந்தவொரு வங்கியிலும் கணக்கு வைத்திருக்கும் மக்களுக்கு அவர்களது வீட்டுக்கே சென்று பணம் வழங்கும் சேவையை அறிமுகம் செய்தது. ஆதாருடன் தங்களது வங்கி கணக்கை இணைத்துள்ள எந்தவொரு வங்கி வாடிக்கையாளர்க்கும் ‘இயங்கக்கூடிய வங்கி சேவைகள்’ வழங்கும் மிகப்பெரிய தளமாக போஸ்ட் பேமெண்ட் உருவாகியுள்ளது.

‘வீட்டு வாசலில் வங்கி சேவை’… 70 நாள் லாக்டவுன் காலத்தில் ரூ.2 ஆயிரம் கோடி டெலிவரி செய்த போஸ்ட்மேன்கள்..

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்கின் இந்த சேவைக்கு நாடு முழுவதும் பலத்த வரவேற்பு உள்ளது. குறிப்பாக கிராம புறங்களில் இந்த சேவையை ஏராளமான மக்கள் பயன்படுத்தினர். லாக்டவுனின் முதல் 70 நாட்களில் நாடு முழுவதுமாக தபால்காரர்கள் ஆதார் செயல்பாட்டு பேமெண்ட் சிஸ்ட்டதை பயன்படுத்தி மொத்தம் ரூ.2 ஆயிரம் கோடியை மக்களின் வீடுகளுக்கு சென்று வழங்கினர். இதில் ரூ.1,000 கோடி லாக்டவுனின் முதல் 50 நாட்களில் வழங்கப்பட்டது. அடுத்த 20 நாட்களில் அடுத்த ரூ.1,000 கோடியை தபால்காரர்கள் பட்டுவாடா செய்துள்ளனர். இந்தியா போஸ்ட்டின் ‘வீட்டு வாசலில் பணம்’ சேவை பிரபலமடைந்துள்ளது.

‘வீட்டு வாசலில் வங்கி சேவை’… 70 நாள் லாக்டவுன் காலத்தில் ரூ.2 ஆயிரம் கோடி டெலிவரி செய்த போஸ்ட்மேன்கள்..

கடந்த மார்ச் 24ம் தேதி முதல் கடந்த 4ம் தேதி வரை நடைபெற்ற 1 கோடி பரிவர்த்தனைகளில் 43 சதவீதம் உத்தர பிரதேசம் மற்றும் பீகாரில் நடைபெற்றது. அந்த மாநிலங்களில் கிராமங்கள் அதிகம். இந்த புதிய சேவை கிராமப் புறங்களில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது என்பதற்கு இதுதான் ஆதாரம். மக்களுக்கு வீட்டு வாசலில் வங்கி சேவைகளை வழங்கும் பணியில், 1.36 அஞ்சல் நிலையங்கள் மற்றும் 1.86 லட்சம் ஆதார் அடிப்படையில இயங்கும் கருவிகள் வாயிலாக 2 லட்சத்துக்கும் அதிகமான தபால்காரர்கள் ஈடுபட்டுள்ளனர்.