இளைஞர் கொலை வழக்கில், ஒருவர் குண்டர் சட்டத்தில் அடைப்பு

 

இளைஞர் கொலை வழக்கில், ஒருவர் குண்டர் சட்டத்தில் அடைப்பு

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பத்ரகாளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் என்கிற செல்லக்குட்டி. இவருக்கும் பண்டாரவிளை பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி அன்று அருண்குமார் மற்றும் அவரது சகோதரர் பத்துப்பாண்டி ஆகியோர், செல்வகுமாரை அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டிப் படுகொலை செய்தனர்.

இளைஞர் கொலை வழக்கில், ஒருவர் குண்டர் சட்டத்தில் அடைப்பு

இதுதொடர்பாக செல்வகுமார் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் இருவரையும் கைதுசெய்த போலீசார், அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், கொலையில் முக்கிய குற்றவாளியான அருண்குமார் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஏரல் காவல் ஆய்வாளர் முத்துலட்சுமியின் அறிக்கையின் பேரில், மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். அதனை ஏற்று, இன்று அருண்குமாரை குண்டர் சட்டத்தில் அடைக்க ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து, தூத்துக்குடி சிறையில் இருந்து வந்த அருண், பாளையங்கோட்டை மத்திய சிறையில் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டார். முன்னதாக, அருண்குமாரின் சகோதரர் பத்துப்பாண்டி குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.