இந்தி தெரியாது போடா டிரெண்டிங்கின் பின்னணியில் தி.மு.க! – பா.ஜ.க அண்ணாமலை சொல்கிறார்

 

இந்தி தெரியாது போடா டிரெண்டிங்கின் பின்னணியில் தி.மு.க! – பா.ஜ.க அண்ணாமலை சொல்கிறார்


இந்தி தெரியாது போடா என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்ட் ஆக காரணம் தி.மு.க தான். தி.மு.க-வின் அற்பமான அரசியலை முறியடிப்போம் என்று பா.ஜ.க அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஐ.பி.எஸ் அண்ணாமலை நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி தற்போது சமூக ஊடகங்களில் பரவ ஆரம்பித்துள்ளது. அ.தி.மு.க-வுடன் கூட்டணியிலிருந்தாலும் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை என்று அவர்

இந்தி தெரியாது போடா டிரெண்டிங்கின் பின்னணியில் தி.மு.க! – பா.ஜ.க அண்ணாமலை சொல்கிறார்

கூறியிருப்பது சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சியில் பங்கு கேட்க முதலில் ஒரு எம்.எல்.ஏ ஆவது இருக்க வேண்டும் என்று பலரும் அண்ணாமலையின் கருத்தை விமர்சித்து வருகின்றனர்
அந்த பேட்டியில், “இந்தி தொடர்பாக ட்விட்டரில் ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனதின் பின்னணியில் இருப்பது தி.மு.க-தான். இந்தியை எதிர்க்கும் தி.மு.க- வாரிசுடன்

இந்தி தெரியாது போடா டிரெண்டிங்கின் பின்னணியில் தி.மு.க! – பா.ஜ.க அண்ணாமலை சொல்கிறார்

ஜோடியாக நடித்த எத்தனை நடிகைகளுக்குத் தமிழ் தெரியும்… தமிழ் தெரியாவிட்டால் என்னோடு நடிக்கக்கூடாது என்று அவர் சொல்லியிருக்கிறாரா… தி.மு.க., செய்வது அற்பமான மொழி அரசியல். இப்படித்தான் மிகவும்

இந்தி தெரியாது போடா டிரெண்டிங்கின் பின்னணியில் தி.மு.க! – பா.ஜ.க அண்ணாமலை சொல்கிறார்

அவசியமான நீட் தேர்வை எதிர்த்து, தமிழக மாணவர்களின் தன்னம்பிக்கையை தி.மு.க., சீர்குலைத்து வருகிறது.
இத்தகைய அரசியலை விட்டுவிட்டு, தமிழகத்துக்கு என்னென்ன திட்டங்களை வைத்திருக்கிறோம் என்பதைச் சொல்லி 2021 தேர்தலை எதிர்கொள்ளுங்கள். அதை விடுத்து, அப்படித்தான் செய்வோமென்றால், அதையும் எதிர்கொண்டு, தி.மு.க.,வின் அற்பமான அரசியலை முறியடிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

இந்தி தெரியாது போடா டிரெண்டிங்கின் பின்னணியில் தி.மு.க! – பா.ஜ.க அண்ணாமலை சொல்கிறார்

சமீப நாட்களாக அண்ணாமலை சமூக ஊடக பா.ஜ.க எதிர்ப்பாளர்களுக்கு நிறைய கண்டென்ட் கொடுத்து வருகிறார். தமிழகம் வளரவில்லை என்று பா.ஜ.க கூறி வந்த நிலையில், தமிழகம் எப்போதோ வளர்ந்துவிட்டது என்று கூறி பா.ஜ.க-வுக்கே அதிர்ச்சி கொடுத்தார். கோ பேக் மோடி ஜார்ஜியா போன்ற நாடுகளில் இருந்து டிரெண்ட் செய்யப்பட்டது என்று கூற, மீண்டும் ஒரு முறை அதை டிரெண்ட் செய்து காட்டி பா.ஜ.க-வுக்கு நெட்டிசன்கள் அதிர்ச்சி அளித்தனர்.

இந்தி தெரியாது போடா டிரெண்டிங்கின் பின்னணியில் தி.மு.க! – பா.ஜ.க அண்ணாமலை சொல்கிறார்


தற்போது மீண்டும் இந்திக்கு எதிரான ட்வீட் டிரெண்ட் ஆக தி.மு.க தான் காரணம் என்று கூறியதன் மூலம் நெட்டிசன்களின் கோபத்துக்கு ஆளாகி வருகிறார். தமிழுக்கு தி.மு.கதான் முழு அத்தாரிட்டி என்ற வகையில் தொடர்ந்து பா.ஜ.க-வினர் பேசி வருவது அவர்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.