இந்த நாளில் கொரோனா பரவல் உச்சத்தை தொடும் – அதிர்ச்சி ரிப்போர்ட்!

 

இந்த நாளில் கொரோனா பரவல் உச்சத்தை தொடும் – அதிர்ச்சி ரிப்போர்ட்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 33,059பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16 லட்சத்து 64ஆயிரத்து 350ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று ஒரேநாளில் 364பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 18,369ஆக அதிகரித்துள்ளது.

இந்த நாளில் கொரோனா பரவல் உச்சத்தை தொடும் – அதிர்ச்சி ரிப்போர்ட்!

கடந்த சில நாட்களாகவே 30 ஆயிரத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா தொற்று பதிவாகி வருகிறது. கொரோனாவை தடுக்க பொதுமக்கள் முகக்கவசம், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்த நாளில் கொரோனா பரவல் உச்சத்தை தொடும் – அதிர்ச்சி ரிப்போர்ட்!

இந்நிலையில் ஹைதராபாத் ஐஐடி பேராசிரியர் வித்யாசாகர் , சூத்ரா என்ற கணிதவியல் கோட்பாடு அடிப்படையில் தமிழகத்தில் 29 லிருந்து 31 க்குள் கொரோனா உச்சத்தை அடைந்து பின்னர் குறையும். அத்துடன் புதுச்சேரியில் அடுத்த இரு நாளுக்குள் கொரோனா உச்சம் தொடும். மகாராஷ்ட்ரா, டெல்லி, குஜராத், உத்தரப்பிரேதசம், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா குறைந்து வருவதாகவும், தமிழகம், புதுச்சேரி போல பஞ்சாப், இமாச்சல பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கொரோனா இனிமேல் தான் உச்சத்தை அடையும் என்றும் தெரிவித்துள்ளார்.