குழந்தைகளை குறிவைக்கும் கொரோனா…பெற்றோர்களே உஷார்…!

 

குழந்தைகளை குறிவைக்கும் கொரோனா…பெற்றோர்களே உஷார்…!

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 256 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகளை குறிவைக்கும் கொரோனா…பெற்றோர்களே உஷார்…!

கொரோனா வைரஸ் நாளுக்குநாள் பரவிவரும் நிலையில் கொரோனா இரண்டாவது அலை கைமீறிப் போய் விட்டதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா முதியவர்களுக்கும், இணைநோய் உள்ளவர்களுக்கும் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதேசமயம் கொரோனா இரண்டாம் நிலை குழந்தைகளுக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரியவந்துள்ளது. 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு நோய் அறிகுறிகள் இல்லாமல் கூட பாதிப்பு ஏற்பட்டுள்ளது மட்டுமின்றி பல்வேறு நோய் அறிகுறிகளும் சிலருக்கு இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஒரு வயது முதல் 8 வயதுள்ள குழந்தைகள் இந்த ஆண்டு அதிகம் பாதிப்பைச் சந்தித்துள்ளதாகவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளை குறிவைக்கும் கொரோனா…பெற்றோர்களே உஷார்…!

கடந்த 1ஆம் தேதி முதல் 4ம் தேதி வரை மட்டும் 79 ஆயிரத்து 688 குழந்தைகள் நாடு முழுவதும் பாதிப்பில் சிக்கியிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக மகாராஷ்டிராவில் 60 ஆயிரத்து 884 குழந்தைகளும் ,சத்தீஸ்கரில் 5 ஆயிரத்து 940 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கு காய்ச்சல் ,மூக்கடைப்பு, வயிற்றுப்போக்கு, தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 256 குழந்தைகளுக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.