லஸ்ஸி கடைக்காரின் பதிலால் அசடு வழிந்த இஸ்மிருதி ராணி- மக்கள் சிரிப்பு

 

லஸ்ஸி கடைக்காரின் பதிலால் அசடு வழிந்த இஸ்மிருதி ராணி- மக்கள் சிரிப்பு

பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி. இவர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமேதி தொகுதியில் நடந்த மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியை தோற்கடித்து வெற்றி பெற்றவர். இவர் கடந்த 2 நாட்களாக அமேதி தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

லஸ்ஸி கடைக்காரின் பதிலால் அசடு வழிந்த இஸ்மிருதி ராணி- மக்கள் சிரிப்பு

அமேதியில் ஒரு பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்மிருதி ராணி, 70 ஆண்டுகள் காங்கிரஸ் குடும்பத்தினரால் இந்த தொகுதி மக்களுக்கு தண்ணீர் கூட வழங்க முடியவில்லை என்று காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார். பின்னர் அவர் அப்பகுதியில் இருந்த லஸ்ஸி கடைக்குச் சென்று லஸ்ஸி சாப்பிட்டார்.

லஸ்ஸி கடைக்காரின் பதிலால் அசடு வழிந்த இஸ்மிருதி ராணி- மக்கள் சிரிப்பு

அப்போது லஸ்ஸி கடையின் உரிமையாளரிடம் அவர் சில கேள்விகளை கேட்க, அதை செல்போனில் வீடியோ எடுத்தார் அமைச்சர். காந்தி குடும்பத்தில் இருந்து யாராவது இங்கு லஸ்ஸி குடிக்க வந்திருக்கிறார்களா என்று கேட்டார் ஸ்மிருதி இராணி. தான் மட்டுமே எளிமையாக இங்கு வந்திருப்பதாக நினைத்திருந்த ஸ்மிருதி ராணி, இங்கு யாரும் வரவில்லை என்று அவர் பதிலளிப்பார் என்றும் எதிர்பார்த்தார். ஆனால் மாறாக, ராகுல் காந்தி, பிரியங்கா வந்திருந்தாங்க என்று கூறினார்.

இந்த பதிலை எதிர்பார்க்காத அமைச்சர் ஸ்மிருதி இரானி, அசடு வழிந்தார். இதைக்கண்டு சுற்றி இருந்தவர்கள் சிரித்து விட்டார்கள். இதை சிலர் செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விட்டனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.