“நாங்க சொல்றத மத்திய அரசு கேட்குது” : ஸ்டாலினை வெறுப்பேற்றும் பழனிசாமி

 

“நாங்க சொல்றத மத்திய அரசு கேட்குது” : ஸ்டாலினை வெறுப்பேற்றும் பழனிசாமி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைத்த திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம் என்று புதுக்கோட்டையில் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

“நாங்க சொல்றத மத்திய அரசு கேட்குது” : ஸ்டாலினை வெறுப்பேற்றும் பழனிசாமி

புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.விழாவில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரூ. 14 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் காவிரி – தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டதுடன், முதற்கட்டமாக ரூ. 6,941 கோடி மதிப்பில் 118.45 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் வெட்டும் பணிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“நாங்க சொல்றத மத்திய அரசு கேட்குது” : ஸ்டாலினை வெறுப்பேற்றும் பழனிசாமி

இந்நிலையில் புதுக்கோட்டையில் விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் பழனிசாமி, “நாங்கள் சொல்வதை மத்திய அரசு கேட்கிறது என்பதற்கு நடந்தாய் வாழி காவேரி திட்ட அனுமதியே சாட்சி. என் வாழ்நாள் பிறவி பலனை அடைந்ததாக நான் உணருகிறேன். என் வாழ்வில் மறக்க முடியாத நாள்.திமுக அனுமதி தந்த ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு துணையோடு தடுத்தது அதிமுக அரசு. காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி.முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைத்த திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். ” என்றார். தொடர்ந்து பேசிய முதல்வர், “எந்த பணி கொடுத்தாலும் சூப்பராக செய்ய கூடியவர்; இந்த மண்ணின் மைந்தர்; அதனால் தான் இந்த பணியை விஜயபாஸ்கரிடம் கொடுக்க நினைத்தேன்” என்று அமைச்சர் விஜயபாஸ்கரை புகழ்ந்துள்ளார்.