புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ் தனித்தனியே போராட்டம்!

 

புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ் தனித்தனியே போராட்டம்!

வேளாண் சட்டங்களை கண்டித்தும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் டெல்லி திமுகவினர் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் அந்த போராட்டத்தில் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் திருமாவளவன், வைகோ, கே.எஸ் அழகிரி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் நிலையிலும், தடையை மீறி உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.

புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ் தனித்தனியே போராட்டம்!

புதுச்சேரியிலும் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடைபெறுகிறது. ஆனால், கூட்டணியில் இருக்கும் திமுகவும் காங்கிரஸும் தனித்தனியே போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினருடன் முதல்வர் நாராயணசாமி உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் நிலையில், அதில் பங்கேற்காத திமுகவினர் திருபுவனையில் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுச்சேரி காங்.தலைவர் சுப்பிரமணியன் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.