தரையில் அமர வைத்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை : தொடரும் அவலம்!

தரையில் அமர வைத்து  கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை : தொடரும் அவலம்!

புதுச்சேரியில் கொரோனா நோயாளிகள் தரையில் அமர்ந்தவாறு சிகிச்சை பெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தரையில் அமர வைத்து  கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை : தொடரும் அவலம்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழகம், புதுச்சேரி, கேரளா, மகாராட்ஷ்ட்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்றின் வேகம் வேகம் காட்டி வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் மொத்த கொரோனா பாதிப்பு 85,952 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் இன்று ஒரேநாளில் பலி எண்ணிக்கை 1,179 ஆக உயர்ந்துள்ளது.

தரையில் அமர வைத்து  கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை : தொடரும் அவலம்!

இந்நிலையில் புதுச்சேரி கதிர்காமம் பகுதியில் இயங்கி வரும் இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளுக்கு படுக்கை வசதிகள் இல்லை. இதனால் கொரோனா நோயாளிகள் படுக்கை வசதியில்லாமல் தரையில் அமரவைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரியில் முறையாக படுக்கை வசதிகளுடன் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை கூறி வரும் நிலையில், கொரோனா நோயாளிகள் தரையில் சிகிச்சை பெற்று வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.