அதிமுகவுக்கு எதிராக மாறிய பாஜக : கலக்கத்தில் வைத்திலிங்கம்

 

அதிமுகவுக்கு எதிராக மாறிய பாஜக : கலக்கத்தில் வைத்திலிங்கம்

வருகிற 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – திமுக இருகட்சிகளுக்கும் நேரடி போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் என பல கட்சிகள் ஐக்கியமாகி உள்ளன. அதேபோல் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இன்றுடன் தேர்தல் பரப்புரை முடிவடையும் நிலையில் அரசியல் கட்சிகள் படுபிஸியாக உள்ளன.

அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.வைத்திலிங்கம் 5வது முறையாக தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் போட்டியிடுகிறார்.ஆனால் அவர் கட்சி தொடர்பான வேலைகளிலும், பரப்புரை செய்யும் போதும் கூட்டணி கட்சியான பாஜகவை அழைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதிமுகவுக்கு எதிராக மாறிய பாஜக : கலக்கத்தில் வைத்திலிங்கம்

இது குறித்து பேசிய பாஜகவின் தெற்கு மாவட்ட அறநிலை துறை மற்றும் கலை இலக்கியப் பேரவை செயலாளர் வினோத், ஒரத்தநாடு தொகுதியில் பாஜகவுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை. அதிமுக வேட்பாளர் வைத்திலிங்கத்தின் மகன் பாஜகவினரை மரியாதை குறைவாக நடத்துகிறார். பேசுகிறார். அதனால் நாங்கள் இங்கே மாற்று கட்சிக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளோம்” என்றார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பாஜக தெற்கு மாவட்ட தலைவர் இளங்கோவன் , இங்கு பாஜகவிற்கு மரியாதை அளிக்கப்படுகிறது. தனிப்பட்ட காரணத்தினால் அதிமுக மீது வினோத் புகார் கூறுகிறார் ” என்றார்.

அதிமுகவுக்கு எதிராக மாறிய பாஜக : கலக்கத்தில் வைத்திலிங்கம்

முன்னதாக 2001, 2006, 2011ஆம் ஆகிய மூன்று சட்டமன்ற தேர்தல்களிலும் அதிமுக சார்பில் வைத்திலிங்கம் ஒரத்தநாட்டில் வெற்றிபெற்று சட்டமன்றத்துக்கு சென்றவர். 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் எம்.ராமசந்திரனிடம் 3,645 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இவர் தற்போது மாநிலங்களவை உறுப்பினாராக உள்ளார்.