5 அடி நீள முதலையை கொன்று சாப்பிட்ட கிராம மக்கள்… விசாரிக்க சென்ற ஒடிசா அதிகாரிகள் அதிர்ச்சி

5 அடி நீள முதலையை கொன்று சாப்பிட்ட கிராம மக்கள்… விசாரிக்க சென்ற ஒடிசா அதிகாரிகள் அதிர்ச்சி

ஒடிசா மாநிலம் மல்ககிரி மாவட்டத்தில் உள்ளது அழகான கிராமம் கலதபள்ளி. இந்த கிராமத்தில் சபேரி ஆறு செல்கிறது. நேற்று முன்தினம் அந்த ஆற்றில் ஒரு முதலை இருப்பதை அந்த கிராமத்தை சேர்ந்த சிலர் பார்த்துள்ளனர். அந்த முதலை சுமார் 5 அடி நீளத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. முதலை பார்த்த கிராமத்தினர் உடனடியாக யாருக்கும் தெரியாமல் அதனை பிடித்தனர்.

5 அடி நீள முதலையை கொன்று சாப்பிட்ட கிராம மக்கள்… விசாரிக்க சென்ற ஒடிசா அதிகாரிகள் அதிர்ச்சி

பின்பு அந்த முதலையின் விரல்களை கொடூரமாக வெட்டினர். அதனை தொடர்ந்து அந்த முதலை கொலை செய்தனர். பலர் அந்த முதலையின் கழுத்து பகுதியை வெட்டியதாகவும், அதன் இறைச்சியை பலர் சமைத்து சாப்பிட்டதாகவும் தகவல். இந்த தகவல் வனத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்தவுடன் அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்ததுபோது அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

5 அடி நீள முதலையை கொன்று சாப்பிட்ட கிராம மக்கள்… விசாரிக்க சென்ற ஒடிசா அதிகாரிகள் அதிர்ச்சி

மலககிரி மாவட்ட வன அதிகாரி பிரதீப் மிரசே கூறுகையில், அந்த சம்பவம் குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தவுடன் வன அதிகாரிகள் எவ்வளவு விரைவாக செல்ல முடியுமோ அவ்வளவு விரைவாக அந்த கிராமத்துக்கு சென்றனர். ஆனால் அங்கு ஒன்றும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக விசாரணை செய்ய 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது மற்றும் குற்றவாளிகள் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.