விதை முளைக்காததால், வேளாண் துறை அலுவலகத்தை சூறையாடிய மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியினர்

விதை முளைக்காததால், வேளாண் துறை அலுவலகத்தை சூறையாடிய மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியினர்

மகாராஷ்டிரா மாநிலம் லதூரில் வேளாண் துறை இணை இயக்குனர் அலுவலகம் உள்ளது. வேளாண் துறை இயக்குனர் அலுவலகம் அண்மையில் அந்த பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு சில வகை விதைகளை விநியோகம் செய்துள்ளது. இதனையடுத்து விவசாயிகள் விதை நடுவதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு விதைகளை நட்டனர். பல நாட்கள் சென்ற பிறகும் விதை முளைக்கவில்லை என தெரிகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

விதை முளைக்காததால், வேளாண் துறை அலுவலகத்தை சூறையாடிய மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியினர்

மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியினர் நேற்று முன்தினம் விதைகள் முளைக்காதது தொடர்பாக புகார் கொடுக்க லதூர் வேளாண் துறை இணை இயக்குனர் அலுவலகத்துக்கு சென்றனர். அப்போது திடீரென சிலர் அலுவலகத்தில் இருந்த பர்னிச்சர்கள், ஜன்னல்கள் மற்றும் கம்ப்யூட்டர்களை அவர்கள் சேதப்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோவில் அலுவலகத்தை சிலர் அடித்து நொறுக்கும் காட்சிகள் தெளிவாக தெரிகிறது.

விதை முளைக்காததால், வேளாண் துறை அலுவலகத்தை சூறையாடிய மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியினர்

இது குறித்து காவல்துறை உதவி ஆய்வாளர் சஞ்சய் பவார் கூறுகையில், சில விதைகள் முளைக்காததால் அது குறித்து விசாரைணை நடத்த கோரி, வேளாண் துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுக்க மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியினர் புகார் கொடுக்க வந்தனர். சிலர் தொண்டர்கள் அலுவலகத்தை சேதப்படுத்தும்போது முழக்கங்களை எழுப்பினர். இது தொடர்பாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.