லேக் பகுதியில் ஒவ்வொரு சில மணி நேரத்துக்கும் பறக்கும் இந்திய விமான படை போர் விமானங்கள்

லேக் பகுதியில் ஒவ்வொரு சில மணி நேரத்துக்கும் பறக்கும் இந்திய விமான படை போர் விமானங்கள்

லேக் பகுதியில் ஒவ்வொரு சில மணி நேரத்துக்கும் போர் விமானங்களை அனுப்பி ரோந்து பணியை இந்திய விமான படை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

உண்மையான எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் சீன ராணுவம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. இந்திய எல்லைகளை அபகரிக்க சீன ராணுவம் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. சீன ராணுவத்தின் முயற்சிகளை இந்திய வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்து வருகின்றனர். சீனாவுடான எல்லை பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயற்சி செய்கிறது. அதேசமயம் நாட்டின் நேர்மை மற்றும் இறையாண்மைக்காக போராடுவதில் உறுதியாக உள்ளது.

லேக் பகுதியில் ஒவ்வொரு சில மணி நேரத்துக்கும் பறக்கும் இந்திய விமான படை போர் விமானங்கள்
இந்திய போர் விமானங்கள்

எல்லை பிரச்சினை தீர்க்க இரு தரப்பிலும் இராஜதந்திர மட்டத்தில் உரையாடல்களை தவிர, சுசுலில் ஜெனரல் மற்றும் பிரிகேடியர் மட்டத்தில் ஒவ்வொரு நாளும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதேசமயம் சீனா பேச்சுவார்த்தை நடத்தி கொண்டே எல்லையில் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு இந்திய ராணுவம் சரியான பதிலடி கொடுத்து வருகிறது.

லேக் பகுதியில் ஒவ்வொரு சில மணி நேரத்துக்கும் பறக்கும் இந்திய விமான படை போர் விமானங்கள்
இந்திய போர் விமானம்

இந்நிலையில், நேற்று காலையில் லேக் ஏரியாவில் சீன படையினருக்கு எதிராக நிற்கும் முன்னணி பணியில் உள்ள இந்திய படையினருக்கு ஆதரவாக ஒவ்வொரு சில மணி நேரங்களுக்கும் ஒரு முறை போர் விமானங்களை அனுப்பி இந்திய விமானப்படை ரோந்து பணியை தீவிரமாக மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் எல்லையில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.