“கட்டு கட்டா பணம் இருந்தாதான் கட்டிலுக்கு வரலாம்” -வரதட்சணை குறைஞ்சதால் ஒரு கணவன் பண்ண வேலை .

 

“கட்டு கட்டா பணம் இருந்தாதான் கட்டிலுக்கு வரலாம்” -வரதட்சணை குறைஞ்சதால் ஒரு கணவன் பண்ண வேலை .

ஒரு பெண்ணை அடித்து, உதைத்து , வரதட்சணை கொடுமை செய்த கணவர் மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தார்கள் .

“கட்டு கட்டா பணம் இருந்தாதான் கட்டிலுக்கு வரலாம்” -வரதட்சணை குறைஞ்சதால் ஒரு கணவன் பண்ண வேலை .

உத்தரபிரதேசத்தின் பிலிபித்தைச் சேர்ந்த  நேஹா ராகுல் என்ற பெண்  தேவ் என்ற நபரை மணந்தார். உத்தரகண்ட் மாநிலம் உதம்சிங் நகரில் வசிக்கும் தேவ், மொராதாபாத்தில் உள்ள சுகாதாரத் துறையில் மருந்தாளராகப் பணியாற்றினார். இந்த திருமணத்தின்போது அந்த பெண்ணின் தந்தை நாத்து லால் வரதட்சணையாக 3.5 லட்ச ரூபாய் அளவுக்கு நகைகள் மற்றும் சீர் வரிசை கொடுத்தார் .ஆனால் இந்த வரதட்சனை  போதவில்லை என்று கூறி அந்த பெண்ணை அவரின் கணவர் மற்றும் மாமியார் இருவரும் சேர்ந்து சித்திரவதை செய்தார்கள் ,அதனால் அந்த பெண் மிகவும் மன வேதனைப்பட்டு ,இந்த விஷயத்தை தன்னுடைய தந்தையிடம் கூறினார் .அதன் பிறகு அவர் மேலும் கொஞ்சம் பணம் கொடுத்தார் .

அதுவும் போதவில்லை என்று கூறி அந்த பெண்ணை அவரின் மாமியார் வீட்டிலிருந்தும் ,கணவரிடமிருந்தும் பிரித்து அந்த வீட்டிலேயே தனியாக வாழ வைத்தார் .மேலும் அவரின் கணவர் வேறு ஒரு பெண்னோடு தொடர்பு வைத்துக்கொண்டார் .

இந்த விஷயம் அந்த பெண்ணுக்கு தெரிந்ததும் இது பற்றி தன்னுடைய கணவரிடம் கேட்டார் .அப்போது அந்த கணவர் அந்த பெண்ணை அடித்து.உதைத்து ,தாடையின் சதைகளை பிய்த்து எடுத்து,எலும்பை உடைத்துள்ளார் .மேலும் ஜனவரி 13 ம் தேதி, தேவ் மற்றும் அவரது நண்பரும் சேர்ந்து  நேஹாவை ஒரு போதைப்பொருளைக் குடிக்குமாறு கட்டாயப்படுத்தினர். அதை குடித்து, அவர்  சுயநினைவை இழந்த பிறகு, இரண்டு பேரும் சேர்ந்து அவரை வீட்டிலிருந்து வெளியே தூக்கி எறிந்துள்ளார்கள்.அதன் பிறகு அந்த பெண் சுயநினைவு திரும்பியபிறகு அங்குள்ள காவல் நிலையத்தில் அவர்கள் மீது புகார் கொடுத்தார் .போலீசார் வரதட்சணை தடைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் தேவ், மற்றும் அவரது நான்கு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவரது நண்பர் மீது  வழக்கு பதிவு செய்தார்கள் .

“கட்டு கட்டா பணம் இருந்தாதான் கட்டிலுக்கு வரலாம்” -வரதட்சணை குறைஞ்சதால் ஒரு கணவன் பண்ண வேலை .